கத்துவா கற்பழிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பார்கவுன்சில்!

கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பார்கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது! 

Last Updated : Apr 26, 2018, 01:46 PM IST
கத்துவா கற்பழிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பார்கவுன்சில்! title=

ஜம்முகாஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து அறையினுள் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

இந்த,கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க பார்கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் பார்கவுன்சில் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News