புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.
பின்னர், எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதை தொடர்ந்து, எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. கேரளா மாநிலம் கண்ணூரில் மர்ம நபர்களால் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரபரப்பாக உள்ள இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil Nadu: Periyar statue vandalised by unidentified persons in Pudukkottai, case registered and investigation on. pic.twitter.com/tbeusZiOxn
— ANI (@ANI) March 20, 2018
நள்ளிரவில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை விடுதி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.