வடமாநில ATM- களில் பணம் வரவில்லை: தவிக்கும் மக்கள்!!

ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக வடமாநில மக்கள் புகார் கூறியுள்ளனர்.

Last Updated : Apr 17, 2018, 12:29 PM IST
வடமாநில ATM- களில் பணம் வரவில்லை: தவிக்கும் மக்கள்!! title=

வட மாநிலங்களான கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். 

பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன. இதனால், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஏராளமான மக்கள், சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்

இது குறித்து போபால் மாவட்ட மக்கள் கூறுகையில்.....! 

கடந்த 15 நாட்களாக ஏடிஎம்களில் பணம் வராததால் நாங்கள் பண நெருக்கடியில் உள்ளோம். 

மற்ற அனைத்து ஏடிஎம்கள் சென்றும் பணம் வராததால் நாங்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளோம் என்றனர். 

ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்.....!

நகரின் பல இடங்களுக்கு அலைந்தும் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியவில்லை. நேற்று முதல் பல ஏடிஎம்களுக்கும் சென்றும் ஒன்றிலும் பணம் இல்லை எனக் கூறினர். 

இன்று மட்டும் 5 அல்லது 6 ஏடிஎம்களுக்கு சென்றும் பணம் எடுக்க முடியவில்லை என்றனர்.

வாரணாசி மக்கள் கூறுகையில்:-

பணம் வராததால் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கவும், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமமாக உள்ளது.

இதனிடையே, பணத்தட்டுப்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Trending News