வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் திடீர் சந்திப்பு!

வட மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர்!  

Last Updated : May 26, 2018, 08:00 PM IST
வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் திடீர் சந்திப்பு! title=

வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர்.

சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகிகினர். அதை தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களின் ஏப்ரல் 27-ம் தேதி சந்தித்து பேசினார். 

இதையடுத்து, ஜூன் 12ஆம் தேதி நடைபெற இருந்த வட கொரியா மற்றும் அமெரிக்க உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் மீண்டும் நிகழந்துள்ளது குறிப்பித்தக்கது. 

இதுகுறித்து, அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், வட கொரிய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வட கொரியாவின் அறிவிப்பு, நல்ல செய்தி. ஆனால், நேரமும், செயல் திறனும் தான், இதற்கு பதில் சொல்லும் என்றார். 

Trending News