பெற்ற மகளை தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய தாய்! அதிர்ச்சி!

திருவனந்தபுரத்தில் பெற்ற தாயே தன்னுடைய 10 வயது மகளை பணத்துக்காக தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : May 14, 2018, 04:00 PM IST
பெற்ற மகளை தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய தாய்! அதிர்ச்சி! title=

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும் வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் பெற்ற தாயே தன்னுடைய 10 வயது மகளை பணத்துக்காக தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் நிகழந்துள்ளது. அந்த காட்சியில், தியேட்டரில் சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போதே 60 வயதுள்ள நபர் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி கேமரா வீடியோ மூலம் பதிவாகியுள்ளது. 

இதையடுத்து, தொழிலதிபர் மைதின் குட்டி மற்றும் இதற்கு உடந்தையாக அருகில் இருந்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Trending News