கதுவா கற்பழிப்பு ஒரு சாதாரண நிகழ்வு: குப்தாவின் சர்ச்சை பேச்சு!

கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது ஒரு சாதாரண  நிகழ்வு என்று காஷ்மீர் மாநில புதிய துணைமுதல்வர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!  

Last Updated : May 1, 2018, 02:31 PM IST
கதுவா கற்பழிப்பு ஒரு சாதாரண நிகழ்வு: குப்தாவின் சர்ச்சை பேச்சு! title=

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து அறையினுள் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

இந்த, கொடூர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை என்னும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில், காஷ்மீரில் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் இரு பாஜக அமைச்சர்கள் பதவி விலகினார்கள். 

புதிய துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த கவிந்தர் குப்தா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

அப்போது அவர் கூறும்போது...!

கதுவா சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறிய விஷயத்தை நாடே பேசும் படி பெரிய விஷயமாக மாற்றிக் இருக்கக்கூடாது.

அது தேவை இல்லாமல் பெரிதாக்கப்பட்டு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இது போன்ற ஒரு மிகச் சாதாரண நிகழ்வுக்காக மாநில அமைச்சர்கள் பதவி விலகியது தேவையில்லாதது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை ஒரு சாதாரண விஷயம் என துணை முதல்வர் கூறியிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

Trending News