தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாகர்கோவிலை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் கோரப்பட்டது. அதில் மாசுகட்டுப்பாடு தொடர்பாக ஸ்டெர்லைட்டுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை தமிழக அரசு உரிய நோக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
தற்போது, இந்த மனு நீதிபதிகள் நாகேஷ்வரராவ், சந்தானகவுடர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரிய மனுதாரர் கோரிக்கையை நீதிபதிகள் புறக்கணித்தனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிபிடத்தக்கது.