இன்று நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நமது அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான செயல்பாடுகள் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் எதிர்மறை அம்சங்களையும் புறக்கணிக்க முடியாது.
இணையம் ஒரு பெரிய தகவல் களஞ்சியமாக உருவெடுத்துள்ளது. எந்த ஒரு பொருள் தொடர்பான தகவல்களும் உங்களிடமிருந்து ஒரே ஒரு கிளிக் தொலைவில் உள்ளது. அதாவது உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே கிளிக் தேடி அனைத்து தகவல்களையும் எடுத்துவிடலாம். அதற்கும் இப்போது அப்டேட் வந்துவிட்டது. கைகளை பயன்படுத்தாமல் வாய்ஸ் அசிஸ்டென்ட் வைத்து தேடி எடுத்துக் கொள்ளலாம். Siri, Google Assistant, Cortana போன்ற 'விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்'-ஐ உங்களுக்காக நியமித்துக் கொள்ளலாம். இதனால் தொலைபேசியை தொட வேண்டிய அவசியமே இல்லை.
உங்கள் ஸ்மார்ட்போனில் இதுபோன்ற பல பயன்பாடுகள் உள்ளன. நீங்கள் கேட்கும்போது ஒவ்வொரு தகவலையும் வழங்கும் ஸ்மார்ட்போன் உங்களின் அனைத்து வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. என்றாவது இது குறித்து யோசித்திருகிறீர்களா?. உங்களின் வார்த்தைகளை எந்தெந்த ஸ்மார்ட்போன் செயலிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். இது ஒருவரின் தனியுரிமை சார்ந்த விஷயம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒட்டுகேட்கும் செயலிகளை அடையாளம் காண்பது எப்படி?
கூகுள் அசிஸ்டண்ட், சிரி, அமேசான் அலெக்சா போன்ற மெய்நிகர் உதவியாளர்கள் “வேக் வார்ட்ஸ்” எனப்படும் சில வார்த்தைகளுக்குப் பதிலளிக்கிறார்கள். எனவே இந்த உதவியாளர் சேவைகள் எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்கும். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனின் 'மைக்ரோஃபோனை' அணுகும் அணுகலை உங்களிடம் இருந்து இன்ஸ்டால் செய்யும்போது வாங்கிக் கொள்ளும். அதன்பிறகு உங்களின் பேச்சுகளை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். அதேபோல், வீடியோ அழைப்பு மற்றும் ஆடியோ அழைப்பு சேவைகளை வழங்கும் Facebook, Instagram போன்ற செயலிகளும் உங்களின் பேச்சை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அது எப்படி என யோசிக்கிறீர்களா? ஏற்கனவே கூறியதுபோல் செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது மைக்ரோபோன் அணுகலை கேட்கும். அதற்கு நீங்கள் கவனிக்காமல் ஓகே கொடுத்து இருந்தால் உங்கள் வாய்ஸ் அந்த செயலிகளால் கேட்க்கப்படும். மைக்ரோபோன் தேவையில்லாத செயலிகளுக்கு அந்த அணுகலை ஒருபோதும் கொடுக்காதீர்கள். செயலிகளுக்கான அணுகலை இன்ஸ்டால் செய்த பிறகு மீண்டும் செக் செய்யுங்கள். கேமரா, மைக்ரோபோன் போன்ற தேவையில்லாத செயலிகளுக்கு அணுகல் கொடுத்திருந்தீர்கள் என்றால் அதனை செட்டிங்ஸூக்கு சென்று ஆப் செய்துவிடுங்கள்.
ஆண்ட்ராய்டு பயனர்கள்
- முதலில் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் செயலியைத் திறந்து, பின்னர் ஆப்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்
- Permissions என்பதை கிளிக் செய்யவும். அதில் நீங்கள் செயலிகளுக்கு கொடுத்திருக்கும் அணுகல் விவரங்கள் இருக்கும்
- இதற்குப் பிறகு நீங்கள் கேமரா, மைக்ரோஃபோன், இருப்பிடம், சேமிப்பு போன்ற அனைத்து அனுமதிகளையும் பார்ப்பீர்கள்
- இப்போது மைக்ரோஃபோனைக் கிளிக் செய்யவும். அதில் உங்கள் ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும் அனைத்து செயலிகளின் விவரங்கள் இருக்கும். இங்கே நீங்கள் அணுகலை வழங்க விரும்பாத அனைத்து செயலிகளின் அணுகலையும் ரத்து செய்யலாம்.
ஐபோன் பயனர்களுகள்
- உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் திறந்து கீழே ஸ்க்ரோல் செய்து Privacy & Security என்பதைக் கிளிக் செய்யவும்
- பின்னர் மைக்ரோஃபோனில் உள்ள விருப்பத்தை கிளிக் செய்யவும்
- உங்கள் ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும் எல்லா செயலிகளையும் இங்கே நீங்கள் காண்பீர்கள்
- உங்கள் விருப்பப்படி, நீங்கள் அணுகலை வழங்க விரும்பாத அனைத்து செயலிகளுக்கும் அணுகலை நிறுத்தலாம்
விர்ச்சுவல் அசிஸ்டென்ட் தடுப்பது எப்படி?
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு Settings >> Apps >> General >> Assistant >> See all Assistant Settings >> Turn Off “Hey Google”. iOS பயனர்களின் Settings >> Siri & Search >> Turn Off “Listen for Hey Siri” என்ற வழிகளை பின்பற்றுங்கள்.
மேலும் படிக்க | மத்திய அமைச்சருக்கே ஆபாச படம்... வீடியோ காலில் மிரட்டல் - கொத்தாக தூக்கிய போலீசார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ