புனே: புனேவின் கான்கார்பேட் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று, வாட்ஸ்அப் மூலம் மணமகளின் கன்னித்தன்மையை சோதிக்கும் சடங்கிற்கு எதிற்பு தெரிவித்து வருகின்றனர்!
வடநாடுகளில் பரவலாக ஒரு கொடூர சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமணமான தம்பதியரின் முதலிரவிற்கு வெள்ளை துணியால் படுக்கை ஏற்பாடு செய்யப்படும், விடிந்தப்பின் அந்த வைண்னிற துணியில் ரத்தக்கரை இருக்கும் பட்சத்தில் அப்பெண் முதலிரவில் முதன்முறையாக கன்னித்தன்மை இழந்தார் எனவும், இல்லையெனும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இச்சம்பிரதாயம் தெரிவிக்கின்றது.
இந்த சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து புனே-வை சேர்ந்த இளைஞர்கள் "Stop the 'V' ritual" எனும் வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றினை தொடர்ந்து அதன் மூலம் விழிப்புனர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சடங்கிற்கு எதிராக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
மும்பை டாடா இன்ஸ்டிடூயுட் ஆப் சோசியல் சயின்ஸ் கல்லூரியை சேர்ந்த முதுகலை மாணவர் தமைதச்சிக்கர் இந்த குழுவினை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அக்குழு உறுப்பினர்களிடம் கேட்கையில், சமூக அவலங்களை குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலே இவ்வாறான செயல்பாடுகளை செய்து வருகின்றோம். முன்னதாக முத்தலாக விவகாரத்திற்கும் நாங்கள் குரல் கொடுத்தோம், இனியும் குரல் கொடுப்போம் என தெரிவித்துள்ளனர்.