Year Ender 2021: இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு முழுவதும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங், விவோ, எம்ஐ உட்பட பல மொபைல் நிறுவனம் போன்களை சந்தையில் அறிமுகம் செய்தனர். 2021 ஆம் ஆண்டின் சிறந்த போன்களின் பட்டியலைக் குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 21, 2021, 08:56 PM IST
Year Ender 2021: இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள் title=

புது டெல்லி: இந்திய சந்தை மட்டுமில்லை, உலக சந்தையிலும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கென பெரிய சந்தை உள்ளது. ஒவ்வொரு வருடமும் புதிய அம்சங்கள், வடிவமைப்புகள், அதிக பாதுக்காப்பு கொண்ட தரத்துடன் கூடிய போன்கள் வந்துக்கொண்டே இருக்கிறது. எனவே ஸ்மார்ட் போன்களின் சுழற்சி முடிவடையாது. மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதே நிறுவனங்கள் விரும்புகிறது. 

இந்த ஆண்டு முழுவதும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் (Apple Phone), சாம்சங் (Samsung), விவோ (Vivo), எம்ஐ (Mi)  உட்பட பல மொபைல் நிறுவனமும் புதிய, வளர்ந்த தொழில்நுட்பம் கொண்ட போன்களை சந்தையில் அறிமுகம் செய்தனர். அதில் சிறந்த சில போன்களை குறித்து பார்ப்போம். 

2021 ஆம் ஆண்டின் சிறந்த போன்களின் (Best Smartphones in 2021) பட்டியலைக் குறித்து உங்களுக்காக தயார் செய்துள்ளோம். இந்த ஆண்டு முடிவதற்குள் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது மற்றவர்களுக்கோ பரிந்துரைக்கலாம்.

ALSO READ |  iPhone 12 இல் இதுவரை இல்லா மிகப்பெரிய தள்ளுபடி

2021 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விவரம்:

iPhone 13 series:

ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸ் ஆன ஐபோன் 13 அல்லது, 13 மினி அல்லது 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆக இருந்தாலும், அவை அனைத்தும் அறிமுக செய்யப்பட்டதிலிருந்தே சந்தையில் பெரும் புயலைக் கிளிப்பியுள்ளன. 6.1 இன்ச் திரை, சிறந்த பின்புற கேமராக்கள், புதிய கேமரா சென்சார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட லென்ஸ்கள், 10Hz முதல் 120Hz கொண்ட புதிய திரைகள், மொத்தத்தில் கடந்த ஆண்டு மாடல்களுடன் ஒப்பிடும்போது சிறந்த ஸ்டைலிஸ் மற்றும் வீடியோ செயல்திறனை வழங்குகின்றன.

ஐபோன் 13 மினியின் விலை ரூ.69,000, ஐபோன் 13 ரூ.79,000 மற்றும் ஐபோன் 13ப்ரோ ரூ.1,19,900 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,29,000.

Samsung Galaxy S21 Ultra

இந்த சாம்சங் போன் ரூ. 1,05,999 மற்றும் 2021 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஆண்ட்ராய்டு தொலைபேசியாகக் கருதப்படுகிறது. இது சிறந்த டெலிஃபோட்டோ கேமராக்கள், சூப்பர் டிஸ்ப்ளே, சூப்பர் பேட்டரி ஆயுள், மிகச் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் கேமரா உண்மையில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா சிறந்த கேமராக்களில் ஒன்றாகும்.

ALSO READ |  வெறும் ரூ. 15-க்கு அட்டகாசமான Oppo இந்த Smartphone

Vivo X70 Pro+

ரூ. 79,000 விலையில்  Vivo X70 Pro+ ஸ்மார்ட்போனானது நேர்த்தியான வடிவமைப்பு, IP68 மதிப்பீடு, 120Hz டிஸ்ப்ளே, சிறந்த வீடியோ காட்சி, கேமரா தரம், தரமான பேட்டரி பேக்அப், மிகச் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதால் 2021 இன் சிறந்த தொலைபேசிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

Mi 11 Ultra

ரூ.69,000 விலையில், இந்த Mi 11 அல்ட்ரா சிறந்த தரம், ஸ்டிரைக்கிங் டிஸ்ப்ளே, தரம்வாய்ந்த SoC, திறமையான கேமராக்கள், நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இது IP68 மதிப்பீடு மற்றும் 8K வீடியோ பதிவு மற்றும் 67W வரை வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பிரீமியம் அம்சங்களையும் கொண்டுள்ளது.

ALSO READ |  Flipkart சலுகை: வெறும் ரூ.699க்கு கிடைக்கிறது அட்டகாசமான Realme ஸ்மார்ட்போன்

OnePlus 9 Pro

OS-இயக்கப்படும் இந்த தொலைபேசியின் விலை ரூ. 59,999 ஆகும். அதிக சேமிப்பு மற்றும் அதிக ரேம் கொண்ட சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் போன் ஆகும். 6.7-இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே பிரகாசமாகவும், காட்சிகள் தெளிவாகவும், வண்ணமயமாகவும் இருக்கும். இது 48MP f/1.8 யூனிட், 4500mAh மற்றும் 65T சார்ஜிங், 50W வயர்லெஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

ALSO READ |  அசத்தல் சலுகை; இந்த ஸ்மார்ட்போனில் 15000 ரூபாய் வரை தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News