டோமினாரையும் பல்சரையும் கலங்க வைக்கும் யமஹாவின் சூப்பர் பைக் விரைவில் இந்தியாவில்!

டொமினார், கிஸ்ஸர் மற்றும் பல்சர் என பிற முன்னணி பைக்களுக்கு டஃப் கொடுக்கும் புதிய மாடலை யமஹா அறிமுகம் செய்யவிருக்கிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 22, 2022, 03:39 PM IST
டோமினாரையும் பல்சரையும் கலங்க வைக்கும் யமஹாவின் சூப்பர் பைக் விரைவில் இந்தியாவில்! title=

புதுடெல்லி: இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய யமஹா பைக், சந்தையில் கடுமையான போட்டியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொமினார், கிஸ்ஸர் மற்றும் பல்சர் என பிற முன்னணி பைக்களுக்கு டஃப் கொடுக்கும் புதிய மாடலை யமஹா அறிமுகம் செய்யவிருக்கிறது...

இந்தியா யமஹா மோட்டார் (Yamaha Motors) சமீபத்தில் அதன் பிரபலமான FZS Fi மோட்டார்சைக்கிளின் புதிய DLX ரக பைக்கை அறிமுகப்படுத்தியது. இப்போது மிக விரைவில் புதிய 2022 FZS25 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டீலர்ஷிப் ஆதாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இது குறித்து யமஹா நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. புதிய பைக் புதிய நிறத்திலும் புதிய தோற்றத்திலும் வர வாய்ப்புள்ளது. புதிய வண்ணங்களைத் தவிர, 2022 மாடலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

பைக்கின் சிறப்பம்சங்கள்
2022 Yamaha FZS25 20 bhp ஆற்றல் மற்றும் 20.1 Nm உச்ச முறுக்கு விசையை வழங்கும் 250 cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இந்த எஞ்சினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை நிறுவனம் வழங்கும்.

ALSO READ | எலக்டிரிக் ஸ்கூட்டர் VS பெட்ரோல் ஸ்கூட்டர் - எது சிறந்தது?

ஜப்பானிய இரு சக்கர வாகன தயாரிப்பாளர், புதிய பைக்கின் அம்சங்களை மேம்படுத்த வாய்ப்புள்ளது, தற்போதைய மாடலில் எல்இடி விளக்குகள், எல்சிடி கன்சோல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.

தற்போதைய பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.43 லட்சம். இந்த விலையைவிட, புதிய பைக்கின் விலை அதிகமாகவே இருக்கும்.  

இந்தியாவில், பஜாஜ் டோமினார் 250, பஜாஜ் பல்சர் எஃப்250 மற்றும் சுசுகி ஜிக்ஸர் 250 ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடும் யமாஹாவின் பைக் (Yamaha Two Wheeler) என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில், நிறுவனம் தைவானில் புதிய EMF எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இ-ஸ்கூட்டர் கோகோரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

2019 இல் Yamaha அறிமுகப்படுத்திய EC-05க்குப் பிறகு இது நிறுவனத்தின் இரண்டாவது மின்சார ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பட்ஜெட்டுக்கு முன் பைக்-ஸ்கூட்டி வாங்க திட்டமா? இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News