வாட்ஸ்அப் தற்போது உலகின் மிகவும் பிரபலமான மல்டிபிளாட்ஃபார்ம் மெசேஜிங் செயலிகளில் ஒன்றாகும். இந்த செயலி மிகப் பிரபலமாக இருப்பதால், இந்த செயலியின் பயனர்களை இலக்காக்கும் நோக்கத்துடன் பல்வேறு வகையான முறைகேடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்ரன.
தற்போது ஒரு புதிய மோசடி பற்றி தெரிய வந்துள்ளது. இதில் ஹேக்கர்கள் (Hackers) முதலில் உங்கள் நண்பரின் அகௌண்டை ஹேக் செய்து, பின்னர் அதன் மூலம் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி, உங்கள் அகௌண்டையும் ஹேக் செய்கிறார்கள்.
இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது?
Whatsapp OTP scam அதாவது வாட்ஸ்அப் ஓடிபி மோசடியில், உங்கள் நண்பர் என்று கூறி ஹேக்கர் உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவார். உங்கள் உடனடி கவனத்தை ஈர்க்க, மோசடி செய்பவர் ஒருவித அவசரநிலையைப் பற்றி உங்களுக்கு விவரிப்பார்.
உங்கள் நண்பரிடம் தான் நீங்கள் உரையாடுகிறீர்கள் என உங்களை நம்பவைத்துவிட்டு, தான் தெரியாமல் உங்கள் ஃபோனில் ஒரு OTP-ஐ ஃபார்வர்ட் செய்துவிட்டதாகவும், அதை திருப்பி அனுப்புமாறும் ஹேக்கர் உங்களிடம் குறுவார். மோசடிக்காரர்கள், பலவித செய்திகள் மூலம் உங்களை நம்ப வைத்து, உங்களை OTP ஐ அனுப்ப வைப்பார்கள்.
ALSO READ: BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! விரைவில் தொடங்கப்படுகிறது 4 ஜி சேவை!
OTP validation அதாவது OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வதுதான் மொசடிக்காரர்களின் குறிக்கோள். மோசடிக்காரர்களுடன் நீங்கள் OTP ஐப் பகிர்ந்து கொண்ட அடுத்த கணமே, நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் அகௌண்டிலிருந்து லாக் அவுட் செய்யப்படுவீர்கள். மேலும் உங்கள் மெசேஜ்கள், தொடர்புகள் மற்றும் குழுக்களுக்கு ஹேக்கருக்கு முழு அணுகல் கிடைத்துவிடும்.
உங்களைப் போல் நடித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் ஹேக்கர் பண உதவியையும் கோரலாம். மோசடி செய்பவர் உங்கள் கணக்கை ஹேக் செய்தவுடன் பல பாதகமான நிகழ்வுகளின் சங்கிலி துவங்கும்.
இந்த வகை மோசடிகளுக்கு இரையாகாமல் தடுக்க விரும்பும் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பின் இரண்டு காரணி அங்கீகாரம் (two factor authorisation) கைகொடுக்கும். இந்த வகை மோசடிகளைத் தடுப்பதற்கான முக்கிய விதி உங்கள் OTP அல்லது தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதுதான்.
தொழில்நுட்பம் (Technology) நமக்கு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆனால், இதனால் வரக்கூடிய பாதகமான விளைவுகளுக்கும் எந்த பஞ்சமும் இல்லை. ஆகையால், நாம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ALSO READ: Tech Tip: whatsapp-ல் மற்றவர் டெலிட் செய்த மெஸேஜ்களை பார்ப்பது எப்படி?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR