வேற போன் வாங்கிடாதீங்க; அட்டகாசமான Vivo V25 Pro வெளியானது

Vivo V25 Pro India: Vivo V25 Pro போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 17, 2022, 04:30 PM IST
  • Vivo V25 Pro இந்தியா வெளியீட்டு விலை
  • Vivo V25, Vivo V25 Pro இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • விவோ வி25 ப்ரோ 5ஜி
வேற போன் வாங்கிடாதீங்க; அட்டகாசமான Vivo V25 Pro வெளியானது title=

விவோ வி25 ப்ரோ இந்தியா வெளியீட்டு விலை மற்றும் விவரக்குறிப்புகள்: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ அதன் புதிய ஸ்மார்ட்போனான விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனில் பல அற்புதமான அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த போன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவை முன்பதிவு செய்வதற்கு தயாராக உள்ளது. இந்த போனில் என்ன அம்சங்கள் (விவோ வி25 ப்ரோ அம்சங்கள்) கொடுக்கப்பட்டுள்ளன, அதன் விலை எவ்வளவு (இந்தியாவில் விவோ வி25 ப்ரோ விலை) மற்றும் எப்போது விற்பனைக்கு கிடைக்கும் (விவோ வி25 ப்ரோ சேல்) என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

விவோ வி25 ப்ரோ வெளியீடு 
உங்கள் தகவலுக்கு, விவோவின் விவோ வி25 ப்ரோ இன்று அதாவது ஆகஸ்ட் 17, 2022 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனை தற்போது முன்பதிவு செய்துக்கொள்ளலாம் ஆனால் வாங்க முடியாது. இந்த போன் வருகிற ஆகஸ்ட் 25, 2022 அன்று இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு பல வண்ண விருபங்களுடன் கிடைக்கும்.

மேலும் படிக்க | 5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி

இந்தியாவில் விவோ வி25 ப்ரோ விலை விவரம்
இந்த விவோ விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கிறது. அந்தவகையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 ப்ரோவின் அடிப்படை மாறுபாடு ரூ.35,999 விலையில் விற்கப்படலாம். அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அதன் மாறுபாடுகள் ரூ.39,999க்கு விற்கப்படலாம். 

விவோ வி25 ப்ரோ விவரக்குறிப்புகள்
வளைந்த முன் டிஸ்பிளே மற்றும் வண்ணத்தை மாற்றும் பின்புறத்துடன், இந்த கண்ணாடி வடிவமைப்பு போன் 6.53-இன்ச் ஃபுல் எச்.டி + தெளிவுத்திறன் மற்றும் அமோல்ட் திரை காட்சியுடன் வருகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதில் மீடியாடெக் டென்சிட்டி 1300 செயலியில் பணிபுரியும் விவோ வி25 ப்ரோ மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது, இதில் 64எம்பி முதன்மை சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை இதில் அடங்கும். 32எம்பி முன்பக்க கேமரா கொண்ட இந்த போனில் 4830எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News