Twitter அறிமுகப்படுத்துகிறது மிகவும் அவசியமான ‘Undo Send’: ஆனா அதுக்கு நீங்க Pay பண்ணனும் Boss!!

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தொடர்ந்து புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்காக அறிமுகப்படுத்திக் கொண்டிருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 05:04 PM IST
  • ட்விட்டர் ட்வீட் வார்த்தை வரம்பை 140 லிருந்து 240 ஆக உயர்த்தியுள்ளது.
  • ட்வீட் திருத்தும் வசதியைக் அதாவது ‘Tweet Edit’ செய்யும் வசதியைக் கொண்டுவர ட்விட்டர் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
  • ட்வீட் செய்த 30 விநாடிகளுக்கு மட்டுமே Edit Button செயல்படும்.
Twitter அறிமுகப்படுத்துகிறது மிகவும் அவசியமான ‘Undo Send’: ஆனா அதுக்கு நீங்க Pay பண்ணனும் Boss!! title=

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் (Twitter) தொடர்ந்து புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்காக அறிமுகப்படுத்திக் கொண்டிருகிறது. ட்விட்டர் ட்வீட் வார்த்தை வரம்பை 140 லிருந்து 240 ஆக உயர்த்தியுள்ளது. இது தவிர, வீடியோவிலும் விளம்பரம் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் யாரேனும் நீண்ட ட்வீட் செய்ய விரும்பினால், அதற்கு ‘Thread’ வசதியும் உள்ளது.

நீண்ட காலமாக பயனர்களுக்கு தேவைப்படும் ஒரு அம்சத்தை கொண்டு வர தற்போது ட்விட்டர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்வீட் திருத்தும் வசதியைக் அதாவது ‘Tweet Edit’ செய்யும் வசதியைக் கொண்டுவர ட்விட்டர் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், இதில் ஒரு சின்ன சிக்கலும் உள்ளது.

ஆரம்ப கட்ட அறிக்கையின்படி, இந்த அம்சத்திற்கு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தற்போது, ​​இந்த அம்சத்திற்கான ஆய்வை ட்விட்டர் மேற்கொண்டுள்ளது. ட்விட்டரின் இந்த அம்சத்தின் பெயர் ‘Undo Send’ என்று இருக்கும் என ட்விட்டர் கூறியுள்ளது.

இதற்காக, நிறுவனம் ஒரு தனி பொத்தானை வழங்கும். புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு, பயனர்கள் 240 க்கும் மேற்பட்ட நீண்ட ட்வீட் மற்றும் எச்டி வீடியோக்களைப் பதிவேற்றும் வசதியைப் பெறுவார்கள். ஆனால் இவற்றிற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.

ALSO READ: Pixel 4a and Pixel 5: கூகுள் தனது முதல் 5 ஜி தொலைபேசிகளை 499 USDக்கு விற்பனை செய்யும்

இதுவரை தெரியவந்த தகவல்களின்படி, ட்வீட் செய்த 30 விநாடிகளுக்கு மட்டுமே Edit Button செயல்படும். இந்த நேரத்தில், பயனர் ட்வீட்டை நீக்க அல்லது திருத்த முடியும். கட்டண பயனர்களுக்கு எழுத்துரு (Font), Hashtag, புதிய சின்னங்கள் (New Icons) மற்றும் தீம் வண்ணம் (Theme Colours) போன்ற அம்சங்களும் கிடைக்கும்.

கட்டண பயனர்கள் சாதாரண பயனர்களை விட ஐந்து மடங்கு பெரிய வீடியோக்களைப் பதிவேற்றும் வசதியைப் பெறுவார்கள். சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர், வேலை பட்டியல்கள் அதாவது Job Listing-கான பணிகளை செய்து வருவதாக செய்தி வந்தது. இருப்பினும் இந்த சேவையும் கட்டண பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ALSO READ: சீனாவின் Weibo, Baidu செயலிககள் இந்தியாவில் தடை; app stores-ல் இருந்தும் நீக்கம்!!

Trending News