Amazon-ல் அதிரடி தள்ளுபடி விலையில் டிவி மற்றும் மொபைல் போன்கள்!

அமேசானில் தள்ளுபடி விலையில் மொபைல் மற்றும் டிவி விற்பனை டிசம்பர்-7ம் தேதி முதல் தொடங்கபட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 03:33 PM IST
  • OnePlus Nord 2 5G மற்றும் Xiaomi 11 Lite NE 5G ஆகியவை அதிகபட்ச எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • அமேசானில் அதிகம் விற்பனை செய்யப்படும் Redmi 9A Sport போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
Amazon-ல் அதிரடி தள்ளுபடி விலையில் டிவி மற்றும் மொபைல் போன்கள்! title=

Amazon Mobile and TV Savings Days விற்பனை டிசம்பர்-7 வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் கோலாகலமாக தொடங்கப்பட்டது.  இந்த சலுகையின்படி OnePlus Nord 2 5G, Samsung Galaxy S20 FE 5G மற்றும் Redmi Note 10S போன்ற மாடல்கள் அதிகளவு தள்ளுபடியை அறிவித்துள்ளன.  நான்கு நாட்கள் நீடிக்கும் இந்த சலுகையானது, ஜனவரி 10ம் தேதி வரை உள்ளது.  இந்த சலுகையில் Samsung Galaxy M52 5G, OnePlus 9 மற்றும் OnePlus 9R ஆகிய மொபைல்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை வழங்குகிறது.

ALSO READ | Credit card பயன்படுத்துபவரா நீங்கள்? இதைக் கட்டாயம் படியுங்கள்

மேலும்  Xiaomi 11 Lite NE 5G மொபைலுக்கு கூடுதல் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி வழங்குகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்லாது, டிவிகளுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.  Citi Bank-ன் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கியாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் கிட்டத்தட்ட ரூ.1000 அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகளுக்கு தள்ளுபடியை வழங்குகிறது.  EMI மூலம் பணம் செலுத்தும்  Citi Bank வாடிக்கையாளர்களுக்கு ரூ.1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

amazon

அமேசானில் அதிகம் விற்பனை செய்யப்படும்  Redmi 9A Sport போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது,  சில்லறை விற்பனையாக ரூ.7,199 என்று விற்கப்பட்டு வந்த இந்த மொபைல் Citi Bank வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ. 6,479 என்ற சில்லறை விலையில் வழங்கப்படுகிறது.  ரூ.17,499 க்கு விற்கப்பட்டு வந்த Redmi Note 10S மொபைலானது தற்போது தள்ளுபடி விலையில் ரூ.16,249 க்கு விற்கப்படுகிறது.  ரூ.39,990 க்கு விற்கப்பட்டு வந்த Samsung Galaxy S20 FE 5G மொபைலானது வாடிக்கையாளர்களுக்கு ரூ,38,740க்கு விற்கப்படுகிறது.  ரூ. 9,499 க்கு விற்கப்பட்ட Tecno Spark 8T தற்போது தள்ளுபடி விலைப்படி ரூ.t8,549 க்கு வழங்கப்படுகிறது.  அதேபோல ரூ.29,990க்கு விற்கப்பட்ட Vivo V21 5G தற்போது தள்ளுபடி விலையில் ரூ.28,740 வழங்கப்படுகிறது.

OnePlus Nord 2 5G மற்றும் Xiaomi 11 Lite NE 5G ஆகியவை அதிகபட்ச எக்ஸ்சேன்ஜ்  தள்ளுபடியுடன் கிட்டத்தட்ட 5000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.  மேலும்  Samsung Galaxy M52 5G, OnePlus 9, OnePlus 9R, மற்றும் Realme Narzo 50A போன்றவையும் 5000 வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.  iQoo Z5 மற்றும் iQoo 7 ஆகிய மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.  மேலும் டிவிக்கள் 40% தள்ளுபடியுடன் AmazonBasics 50-inch 4K TV ரூ.32,999 க்கு விற்கப்படுகிறது,  30% தள்ளுபடியுடன் Sony 50-inch 4K UHD Google TV ரூ.77,990க்கு விற்கப்படுகிறது, மேலும்  iFFalcon 43-inch 4K UHD TV 48% தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News