Top 5 AC: குறைவான மின்சாரம்.. குளுகுளுவென இருக்கும் வீடு: டாப் 5 ஏசி-க்கள்

குறைவான மின்சார செலவில் வீட்டை குளுகுளுவென வைத்திருக்கும் டாப் 5 ஏசிக்களை தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 31, 2022, 04:53 PM IST
Top 5 AC: குறைவான மின்சாரம்.. குளுகுளுவென இருக்கும் வீடு: டாப் 5 ஏசி-க்கள் title=

சுட்டெரிக்கும் வெயில், புளுக்கம் என்பது எக்காலத்திலும் இருக்கும் ஒன்றாக இப்போதைய காலநிலை மாறிவிட்டது. மழை பெய்தால் கூட அடுத்த ஒரு மணி நேரத்தில் புளுக்கமும், வெட்கையும் வாட்டி வதைக்கிறது.  இதில் இருந்து தப்பிக்க வீடுகள் தோறும் ஏசி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளபட்டுள்ளனர். பல வகையான ஏசி வகைகள் இருப்பதால், இப்போது எந்த ஏசி வாங்குவது என்பதில் சிறிய தடுமாற்றம் இருக்கலாம். எப்போது ஏசி வாங்கினாலும், அவற்றின் தரம் மற்றும் பயன்படுத்தும் மின்சாரம் குறித்த அடிப்படை தகவல்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

பட்ஜெட் விலையில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி உங்கள் அறைகளை குளிர்விக்கும் டாப் 5 ஏர் கண்டிஷனர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 

1. வேர்ல்பூல் ஏர்கண்டிஷ்னர்

வேர்ல்பூல் நிறுவனத்தின் 1.5 டன், 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிட் ஏசி லேட்டஸ்ட் மாடல். அமேசானில் 37,490 ரூபாய் (தோராயமாக) கிடைக்கும் இந்த ஏசி, 4 இன் 1 கன்வெர்டிபிள் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது. அறையில் இருக்கும் வெப்ப நிலைக்கு ஏற்ப நவீன இன்டெலிசென்ஸ் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தின் மூலம் விசிறி வேகத்தை மாற்றி வெப்பநிலையை சரிசெய்து, குளிரூட்டியைக் கொடுக்க வல்லது. குறைவான பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்தும். சத்தமில்லாமல், இதமான குளிர்ச்சியைக் கொடுக்கும் ஏசி. 

மேலும் படிக்க | ரூ.22-க்கு 90 நாள் வேலிடிட்டி; BSNL பலே திட்டம்

2. வோல்டாஸ் ஏசி

வோல்டாஸ் நிறுவனத்தின் 1.5 டன் 5 ஸ்டார் ஜன்னல் ஏசி, அமேசானில் தோராயமாக 33, 880 ரூபாய்க்கு கிடைக்கும். செயல்பாடு மற்றும் வடிவமைப்பில் சரியானதாக இருக்காது என்ற எண்ணம் இந்த ஏசியைப் பார்க்கும்போது உங்களுக்கு வராது. சிக்கனமானது மற்றும் நிறுவுவதற்கு எளிதானது. இதில் இருக்கும் வடிப்பான் அறைக்குள் இருக்கும் காற்றை சுத்தப்படுத்துகிறது. சீரான குளிரூட்டலைச் செய்ய அதிக காற்று ஓட்டத்தை வழங்கும். காலநிலைக்கு ஏற்ப இதமான குளிர்ச்சியை கொடுக்க வல்லது.  

3. எல்ஜி ஏர் கண்டிஷ்னர்

LG AI DUAL 5-ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி, அமேசானில் தோராயமாக 44, 499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொருத்தமான குளிரூட்டும் திறனை, அறையின் நிலைமையை உணர்ந்து கொடுக்கும். விருப்பங்களுக்கு ஏற்ப மின்விசிறி வேகம், வேன் நிலை மற்றும் வெப்பநிலை அமைப்புகளை தேர்வு செய்யலாம். சிறப்பம்சம் என்னவென்றால், இந்த AC ஆனது 'ஆன்டி வைரஸ் பாதுகாப்பு' உடன் வருகிறது. ஸ்டெபிலைசர் இல்லாத செயல்பாடு, ஸ்மார்ட் டயக்னோசிஸ் சிஸ்டம், சூப்பர் சைலண்ட் ஆபரேஷன் மற்றும் ஆட்டோ க்ளீன் போன்ற பல சூப்பரான அம்சங்கள் இருக்கின்றன.  

4. பேனாசோனிக் ஏசி 

Panasonic 1 Ton 5 Star Wi-Fi இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர், அமேசானில் தோராயமாக 36, 490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெப்ப நிலைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் அம்சம் இருக்கும் இந்த ஏசியை, அமேசானின் அலெக்சா அல்லது கூகுள் குரல் உதவியாளரான OkGoogle மூலம் கட்டுப்படுத்த முடியும். AI தொழில்நுட்பமும் இருப்பதால் உலகின் எந்த முலையில் இருந்தும் இந்த ஏசியை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

5. எல்ஜி  ஏர்கண்டிஷ்னர்

எல்ஜியின் மற்றொரு ஏசியான 1.5 டன் 5 ஸ்டார் வைஃஐ இன்வெர்டர் விண்டோ ஏசி, வேகமாக குளிர்ச்சியைக் கொடுக்கும். ஸ்பீடு டூயல் ரோட்டரி மோட்டாருடன் டூயல் இன்வெர்ட்டர் கம்ப்ரசர் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஏர்கண்டிஷ்னரையும் அமேசான் அலெக்ஷா மற்றும் ஒகே கூகுள் மூலம் கட்டுப்படுத்த முடியும். உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் ஏசியை ஸ்டார்ட் அல்லது ஆஃப் செய்யலாம்.

மேலும் படிக்க | iPhone 13 இல் பம்பர் சலுகை! ரூ.29 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News