டெக்னோ போவா 5 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது: ஸ்மார்ட்போன் பிராண்டான டெக்னோ, டெக்னோ போவா 5 சீரிஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் போவா 5 (Pova 5) மற்றும் போவா 5 ப்ரோ (Pova 5 Pro) ஆகியவை உள்ளன. இரண்டு சாதனங்களிலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள் சேமிப்பு உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் வெளியிடப்பட்டுள்ளது. டெக்னோவின் இந்த ஸ்மார்ட்போன் தொடர் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. அதன் விலை, அம்சங்கள் மற்றும் அனைத்து விவரங்களையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Tecno Pova 5 Series: விலை எவ்வளவு?
இரண்டு டெக்னோ போவா 5 சீரிஸ் சாதனங்களும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள் சேமிப்புடன் வருகின்றன. Pova 5 8GB RAM + 128GB என்ற ஒரே ஒரு சேமிப்பக மாறுபாட்டில் வருகிறது. இதன் விலை ரூ. 11,999 ஆகும். மொபைலின் ரேமை கிட்டத்தட்ட 8ஜிபி வரை விரிவுபடுத்தலாம். இந்த வழியில், தொலைபேசி 16 ஜிபி ரேம் + 128 ஜிபி உள் சேமிப்பு ஆதரவைப் பெறும். Pova 5 Pro 5G ஆனது 8GB RAM + 256GB சேமிப்பக மாறுபாட்டிலும் வருகிறது. இந்த மொபைலின் ரேமை கிட்டத்தட்ட 8ஜிபி வரை விரிவுபடுத்தலாம். இதன் விலை 14,999 ரூபாய் ஆகும்.
Tecno Pova 5 Series: விற்பனை தேதி
இந்த இரண்டு போன்களின் விற்பனையும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் தொடங்கப்படும். இந்த சேலில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அதாவது பரிமாற்ற சலுகையும் உள்ளது. இதை அந்த சலுகையில் வாங்கினால், ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும். மேலும், நோ-காஸ்ட் இஎம்ஐயும் 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. Tecno Pova 5 ஐ ஹரிக்கேன் ப்ளூ (Hurricane Blue), மெகா பிளாக் (Mecha Black) மற்றும் ஆம்பர் கோல்ட் (Amber Gold) ஆகிய மூன்று வண்ணங்களில் வாங்கலாம். Pova 5 Pro ஆனது Mecha Black மற்றும் Amber Gold ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.
மேலும் படிக்க | இந்தியாவில் டாப் 10 யூடியூபர்கள்: ஒரு முழுமையான பட்டியல்
Tecno Pova 5 Pro: விவரக்குறிப்புகள்
Tecno Pova 5 ஸ்மார்ட்போன் ஒரே ஒரு மாடல் 8GB RAM + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் விலை ரூ. 11,999 ஆகும். ஹரிக்கேன் ப்ளூ, மெக்கா பிளாக் மற்றும் ஆம்பர் கோல்ட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போவா 5 ப்ரோ 3டி-டெக்ஸ்ச்சர்டு டிசைனுடன் கூடிய பிரீமியம் ஆர்க் இடைமுகத்தை இது கொண்டுள்ளது. இது அறிவிப்புகள், அழைப்புகள் மற்றும் இசைக்கு பின்புறத்தில் RGB ஒளி வரம்புடன் பொருத்தப்பட்டுள்ளது. சாதனம் 68W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. வெறும் 15 நிமிடங்களில் 50 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்யும் திறன் இந்த போனுக்கு உள்ளது.
இளைஞர்களை மனதில் வைத்து மலிவு விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Pova 5 Pro 5G ஆனது MediaTek Dimensity 6080 செயலி, 8 GB ரேம் மற்றும் 256 GB சேமிப்பு மாறுபாட்டைக் கொண்டுள்ளது.
Tecno Pova 5: விவரக்குறிப்புகள்
Tecno Pova 5 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் MediaTek Helio G99 6nm சிப்செட், 50-megapixel AI Dual Camera, 8-megapixel முன்பக்க கேமரா, 6,000mAh உடன் 45W Smart Charge போன்ற முக்கிய அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.
மேலும் படிக்க | 6G வரப்போகுது, இனி 5ஜி-க்கு வேலையில்லை - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ