Motorola Defy Launch: Motorola-வின் வலிமையான ஸ்மார்ட்போனான Motorola Defy அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புல்லிட் குழுமத்துடன் இணைந்து மோட்டோரோலாவால் தயாரிக்கப்பட்டுள்ளது, இதற்காக புல்லிட் குழுமம் இந்த ஆண்டு மோட்டோரோலாவுடன் கூட்டுசேர்ந்தது.
தங்களது இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) இதுவரையில் வெளிவந்துள்ள மிகவும் வலிமையான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் என்று மோட்டோரோலா கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இராணுவ தரத்தைப் போல வலுவானது என்று மோட்டோரோலா தெரிவித்துள்ளது.
Motorola Defy, IP68 நீர்ப்புகா மதிப்பீட்டோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. மோட்டோரோலா டிஃபி தண்ணீருக்கு அடியில் 1.5 மீட்டர் ஆழத்தில் 35 நிமிடங்களுக்கு இருந்தாலும், இந்த போனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த போன் பல முறை 6 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் உடையாது என்றும் நிறுவனம் உறிதியாக கூறியுள்ளது.
விவரக்குறிப்புகள்
மோட்டோரோலா டிஃபி 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் டூயல் சிம் ஸ்லாட்டுடன் வருகிறது. இதன் சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512 ஜிபி வரை விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC பிராசசரில் வேலை செய்கிறது.
ALSO READ: இந்தியாவில் அறிமுகமானது Motorola Moto E7 Power ஸ்மார்ட்போன், என்னென்ன அம்சங்கள்?
கேமரா அமைப்பு
மோட்டோரோலா டிஃபி மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்கள், மேக்ரோ கேமரா 2 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) உள்ள செல்ஃபி கேமரா 8 மெகாபிக்சல்கள் மட்டுமே கொண்டுள்ளது. கைரேகை சென்சார் அம்சத்துடன் மோட்டோரோலா டிஃபி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 20W டர்போ பவர் சார்ஜ் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை சுமார் 29 ஆயிரம் ஆகும்.
Oppo F19 Pro -வுடன் போட்டி
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் Oppo F19 Pro-வுடன் போட்டியிடக்கூடும். இந்த தொலைபேசியில் 6.4 அங்குல AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 2400 x 1800 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. அதன் டிஸ்ப்ளேவிற்கு கொரில்லா கிளாஸின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் மீடியாடெக் ஹீலியோ பி 95 SoC பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 இயக்க முறைமையில் இயங்குகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் 256 ஜிபி வரை விரிவாக்க முடியும். இந்த தொலைபேசியின் விலை ரூ .21,490 ஆகும்.
ALSO READ: Poco M3 Pro 5G Smartphone: தள்ளுபடி விலையில் இன்று தொடங்குகிறது விற்பனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR