Solar Fencing எவ்வாறு செயல்படுகிறது? மானியம் பெற தயாரா?

இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அது சொத்தாகவோ வீடாகவோ நிலமாகவோ இருக்கலாம். அல்லது, குடியிருப்புப்பகுதிகள், விவசாய பூமி, பயிர்கள், தொழிற்சாலைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பிரதான கவலையாக மாறியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2021, 03:10 PM IST
  • Solar Fencing எவ்வாறு செயல்படுகிறது
  • உடல்ரீதியான காயம் இல்லாமல் பாதுகாப்புக்கு உத்தரவாதம்
  • அரசு மானியம் தருகிறது
Solar Fencing எவ்வாறு செயல்படுகிறது? மானியம் பெற தயாரா?   title=

புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அது சொத்தாகவோ வீடாகவோ நிலமாகவோ இருக்கலாம். அல்லது, குடியிருப்புப்பகுதிகள், விவசாய பூமி, பயிர்கள், தொழிற்சாலைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பிரதான கவலையாக மாறியுள்ளது. 

வேலி என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய நவீன காலகட்டத்தில் சோலார் ஃபென்சிங் (Solar Fencing) என்பது நவீனமயமாக்கப்பட்ட மற்றும் புதிய மரபை உருவாக்கும் பாதுகாப்பு வழிகளில் முக்கியமானது ஆகும்.  பயனுள்ள மற்றும் திறமையான பாதுகாப்பை வழங்குகிறது. சூரியசக்தியில் இயங்கும் வேலி, ஒருவரின் சொத்தை பாதுகாப்பதோடு, புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தடுக்கிறது.  

மின்சார வேலி போல செயல்படும் Solar Fencing, மனிதர்களோ விலங்குகளோ (Animals) வேலியுடன் தொடர்பு கொள்ளும்போது சுருக்கமான மற்றும் கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது. உயிர் இழப்பு ஏதும் ஏற்படாது என்பதை உறுதிசெய்யும் இந்த பாதுகாப்பு வழிமுறை, திருட்டு மற்றும் அத்துமீறலைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்கிறது.

Also Read | வருமான வரியில் 46,800 சேமிக்க வேண்டுமா? இதோ Tips   

சோலார் ஃபென்சிங் (Solar Fencing) அம்சங்கள்

  1. செலவு குறைவு, மலிவானது
  2. குறைந்த பராமரிப்பு செலவு
  3. சிறந்த பாதுகாப்பு, மிகவும் நம்பகமானது
  4. மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எந்தவிதமான உடல் ரீதியான தீங்கும் ஏற்படாது
  5. புதுப்பிக்கத்தக்க சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறது
  6. மையப்படுத்தப்பட்ட அலாரம் அமைப்புடன் வருகிறது
  7. தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்கிறது  

சூரிய வேலி அமைப்பின் பகுதிகள் 

  1. பேட்டரி
  2. மின்சாரத்தை கட்டுப்படுத்தும் அலகு (CCU)
  3. மின் ஆற்றல்
  4. வேலியில் மின்னழுத்த அலாரம் (FVAL)
  5. ஒளி மின்னழுத்தத் தொகுதி

Also Read | நாயாக நடித்து மனிதனை ஏமாற்றிய எலி 

சூரியசக்தியினால் இயங்ககூடிய மின் வேலிகள் அமைக்க, விவசாயிகளுக்கு (Farmers) தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதற்காக 2020 – 2021 நிதியாண்டில் 3 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (National Agriculture Development Scheme)

சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய சோலார் ஃபென்சிங் (Solar Fencing) அமைக்க தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் கிடைக்கும்.

Also Read | Wheelchairஇல் 250 மீட்டர் உயர கட்டடத்தில் ஏறி சாதனை படைத்த Lai Chi-wai 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News