ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமா? சாம்சங்கின் அசத்தலான புதிய டிவிகள்!

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் நியோ கியூஎல்இடி 8கே மற்றும் நியோ கியூஎல்இடி ஆகிய இரண்டு வகையான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்துகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2022, 07:03 AM IST
  • சாம்சங் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • 8K தரத்துடன் இந்த ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது.
  • 50இன்ச் முதல் 85இன்ச் வரை கிடைக்கிறது.
ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமா? சாம்சங்கின் அசத்தலான புதிய டிவிகள்! title=

சாம்சங் நிறுவனம் ஆனது இந்தியாவில் 2022 நியோ கியூஎல்இடி சீரிஸை அறிமுகப்படுத்துகிறது.  இந்த சீரிஸில் நியோ கியூஎல்இடி 8கே மற்றும் நியோ கியூஎல்இடி ஆகிய இரண்டு வகையான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாக இருக்கிறது.  சில மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட் டிவி சாதாரண டிவியல்ல, இதில் கேமிங் கன்சோல், விர்ச்சுவல் ப்ளெகிரவுண்ட் மற்றும் ஹாம் கண்ட்ரோலிங் ஸ்மார்ட் ஹப் போன்றவை உள்ளன என நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த கியூஎல்இடி 8கே ஸ்மார்ட் டிவியானது 65இன்ச் முதல் 85இன்ச் வரை கிடைக்கிறது மற்றும் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியானது 50இன்ச் முதல் 85இன்ச் வரை கிடைக்கிறது.

மேலும் படிக்க | கரண்ட் இல்லாதபோது சார்ஜ் செய்வது எப்படி? ஸ்மார்டா யோசிக்கவும்

samsung

விலையை பொறுத்தவரை நியோ கியூஎல்இடி 8கே ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.3,24,990 ஆகும், இந்த விலையானது 55இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு பொருந்தும்.  50இன்ச் கொண்ட நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,14,990 ஆகும். ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 30 வரை இந்த நியோ கியூஎல்இடி 8கே மற்றும்  நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளை வாங்குவோருக்கு ரூ.1,49,9990 மதிப்புள்ள சாம்சங் சவுண்ட் பார் மற்றும் ரூ.8,900 மதிப்புள்ள ஸ்லிம் ஃபிட் கேம் வழங்கப்படும் என்று சாம்சங் அறிவித்துள்ளது.

சாம்சங்கின் நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் மெல்லியதாகவும், உயர்தரமாக வடிவமைக்க்கப்பட்டு இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி குவாண்டம் மேட்ரிக்ஸ் டெக்னாலஜி ப்ரோவுடன் வருகிறது மற்றும் நியோ கியூஎல்இடி 8கே ஸ்மார்ட் டிவி நியூரல் குவாண்டம் ப்ராசஸர் 8கேவுடன் வருகிறது, இதன் மூலம் சிறப்பான கோணங்கள், தெளிவான படங்கள் மற்றும் சரியான படத்தின் அளவை காண முடிகிறது. நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகளில் ஐஓடி ஹப் பொருத்தப்பட்டுள்ளது, இது வீட்டிலுள்ள பிற சாதனங்களையும் டிவி மூலம் கண்ட்ரோல் செய்ய உதவுகிறது.

samsung

இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஸ்லிம் ஃபிட் கேமராவை இணைப்பதன் மூலம் தரமான வீடியோ கால் மற்றும் வீடியோ கான்பரன்சிங்கை பயன்படுத்த முடியும்.  நியோ கியூஎல்இடி 8கே ஸ்மார்ட் டிவியானது டால்பி அட்மோஸ் ஆதரவுடன் 90w 6.2.4 சேனல் ஆடியோ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.  இது ஆப்ஜெக்ட் ட்ராக்கிங் சவுண்ட் ப்ரோவுடன் வருவதால் சிறந்த 3டி சவுண்ட் அனுபவத்தை தருகிறது.  சிறந்த கேம் அனுபவத்தை தர ஜூம் இன் மற்றும் அல்ட்ரா வைட் வியூ போன்றவை உள்ளன, மேலும் இது 10 வருட பர்ன் அக்ரீன் கேரன்டியுடன் வருகிறது.

மேலும் படிக்க | நம்ப முடியாத Flipkart சலுகை: ரூ. 32,000 5ஜி சியோமி போனை ரூ. 10,000-க்கும் குறைவாக வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News