கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக கூகுள் பிளே ஸ்டோரில் யூசர்களிடம் பணம் வாங்கிய புகாரில் பணத்தை திரும்ப கொடுக்க அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 5238 கோடி ரூபாய் நிதியை திரும்ப கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறது
யாரெல்லாம் தகுதியுடையவர்கள்?
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு என்னவென்றால் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கூகுள் பர்சேஸ்சுகளில் அதிக கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கூகுள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் யூசர்களுக்கு இழப்பீடு தொகையை கொடுக்க தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் தெரிவித்துவிட்டது.
மேலும் படிக்க | இந்தாண்டில் ஆதிக்கம் செலுத்திய மொபைல்கள்... அதுவும் ரூ.15 ஆயிரம் குறைவான விலையில்!
இதன்படி 5,238 கோடி ரூபாயை சுமார் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்குகிறது. 7.14 கோடி பேர் தானாகவே இந்த இழப்பீட்டு தொகைக்கு தகுதியானவர்கள். அவர்கள் எந்தவொரு விண்ணப்பமும் இழப்பீட்டுக்காக கொடுக்க தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களை கூகுள் தானாகவே அடையாளம் கொண்டு அவர்களுக்கான தொகையை கொடுத்துவிடும். எஞ்சியவர்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதாவது அக்டோபர் 16, 2016 மற்றும் செப்டம்பர் 30, 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் பர்சேசுகள் மூலம் ஏதாவது வாங்கியிருக்க வேண்டும். அவர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த தகுதியை பூர்த்தி செய்பவர்கள் கூகுளின் இழப்பீட்டு தொகைக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். இதுகுறித்து யூசர்களின் Google Play Store கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
இந்த மின்னஞ்சல் முகவரி PayPal அல்லது Venmo கணக்குடன் தொடர்புடையதாக இருந்தால், இந்த தளங்களில் ஒன்றின் மூலம் பணம் அனுப்பப்படும். பேபால் அல்லது வென்மோ மூலம் பணம் பெறுபவர்களும் கட்டண உறுதிப்படுத்தல் இமெயில் அறிவிப்பையும் பெறுவார்கள். தற்போதைய நிலவரப்படி, மீதமுள்ள 30 சதவீத தகுதியுள்ளவர்கள் தங்கள் பணத்தை எவ்வாறு கோர முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. வழக்கமாக, தகுதியுள்ள நபர்களுக்கு அபராதம் அல்லது கட்டணம் செலுத்தக் கோருவதற்கு ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் இந்தக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தால், பணத்தை எவ்வாறு க்ளைம் செய்வது என்பது குறித்த அறிவிப்புகள் அல்லது வழிமுறைகளைக் கவனிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ