இந்தியாவில் செயல்படும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் ஜூலை 1, 2022 முதல் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு புதிய திட்டங்களும் முறையே ரூ. 228 மற்றும் ரூ. 239 ஆகிய விலைகளில் கிடைக்கிறது, இந்த இரண்டு திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் முழுவதும் செல்லுபடியாகும்.
மேலும் படிக்க | ஏர்டெல் அட்டகாசம்: இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ. 6000 கேஷ்பாக்
மேலும் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ரீசார்ஜ் தேதி ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் எஸ்டிவி 228 ஆனது ஜூலை 1, 2022 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் அழைப்புகள், 2ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும், 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு இன்டர்நெட் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். அதன் பிறகு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும் பிஎஸ்என்எல் இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு அரினா மொபைல் கேமிங் சேவையை வழங்குகிறது.
அடுத்ததாக பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் ரூ.10 டாக்டைம் மதிப்புடன் வருகிறது. 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு இன்டர்நெட் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கேமிங் சேவையையும் வழங்குகிறது. இந்த ரூ.228 மற்றும் ரூ.239 ஆகிய இரண்டு திட்டங்களும் ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகின்றன. ஒரு மாதத்தில் எந்த நாளில் நீங்கள் ரீசார்ஜ் செய்கிறீர்களோ, அடுத்த மாதம் அதே தேதியில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த இரண்டு திட்டங்களும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவின் மாதாந்திர சலுகைகளுடன் போட்டியிட தொடங்கப்பட்டுள்ளன. ஜிபி II மற்றும் ஜிபி II-க்கு அப்பால் உள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.107 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் சாம்சங்க் 5ஜி ஸ்மார்ட்போன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR