Renault Car Discount Offer: நாட்டின் ஆட்டோமொபைல் துறையில், கார் தயாரிப்பாளர்கள் செப்டம்பர் மாதத்தில் தங்கள் கார்களின் விற்பனையை அதிகரிக்க தங்கள் கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்குகிறார்கள். இதில் ஹோண்டா கார்ஸ் இந்தியாவுக்குப் பிறகு ரெனால்ட் நிறுவனமும் புதிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் குறிப்பிட்ட கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ரெனால்ட் தள்ளுபடிகளை பொறுத்தவரை, பிரபலமான ஹேட்ச்பேக் க்விட், காம்பாக்ட் எஸ்யூவி சிகர் மற்றும் எம்பிவி ட்ரைபர் உள்ளிட்ட கார்களுக்கு இந்த ஆஃபர்கள் கிடைக்கும். இந்த கார்களை வாங்கினால் அதிகபட்சமாக ரூ.50,000 வரை தள்ளுபடியை பெறலாம். பண தள்ளுபடி தவிர, இந்த தள்ளுபடியில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.
நீங்களும் இந்த ரெனால்ட் கார்களில் ஏதேனும் ஒன்றை வாங்க திட்டமிட்டிருந்தால், எந்த காரை வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ரெனால்ட் ட்ரைபர்
ரெனால்ட் ட்ரைபர் MPV ஆனது, அதன் வடிவமைப்பு, மைலேஜ் மற்றும் இடவசதிக்காக விரும்பப்படும் பிரிவில் குறைந்த அளவிலான MPV ஆகும். இந்த எம்பிவியை வாங்கினால், 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். ரெனால்ட் ட்ரைபரில் கிடைக்கும் இந்த தள்ளுபடி சலுகையில், ரூ.25 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடியும், ரூ.10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடியும் கிடைக்கும்.
நீங்கள் ரெனால்ட் ட்ரைபர் லிமிடெட் எடிஷனை வாங்கினால், 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை பெறலாம். இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பில் கிடைக்கும் தள்ளுபடியில் 10 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, 25 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, நிறுவனத்தின் ஸ்கிராபேஜ் பாலிசியின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.
மேலும் படிக்க | Redmi: குறைந்த விலையில் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்; ரெட்மி பிளான்
Renault Kwid அதன் பிரிவில் பிரபலமான ஹேட்ச்பேக் காராகும். இது கவர்ச்சிகரமான வடிவமைப்பு, மைலேஜ் மற்றும் குறைந்த விலைக்கு விரும்பப்படுகிறது. இந்த ஹேட்ச்பேக்கை வாங்கினால், 35 ஆயிரம் ரூபாய் வரை பலன் கிடைக்கும். Renault Kwid-ல் கிடைக்கும் இந்த தள்ளுபடியில் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி, ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.
Renault Kyger காம்பாக்ட் SUV பிரிவில் பிரபலமான கார். இது அதன் வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் குறைந்த விலைக்கு விரும்பப்படுகிறது. இந்த எஸ்யூவியை நீங்கள் விரும்பினால், இதன் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை பயனடையப் போகிறீர்கள். ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் கீழ் இந்த எஸ்யூவியில் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் நன்மையை நிறுவனம் வழங்குகிறது.
மேலும் படிக்க | Smart Phone Battery: ஸ்மார்ட்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘சில’ டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ