பல நன்மைகள்! கெத்து காட்டும் Reliance Jio புதிய பிளான்

ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய நீண்ட காலத்திற்கான ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 5, 2021, 12:59 PM IST
பல நன்மைகள்! கெத்து காட்டும் Reliance Jio புதிய பிளான் title=

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு வருட செல்லுபடியாகும் ரூ.3,499 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தை நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் இரண்டிலும் உண்டு. இந்த ரபுதமான திட்டத்தின் முழு விவரம் இங்கே காண்போம்.

இந்த புதிய திட்டம் பல்வேறு ஜியோ (Reliance Jio) பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான சந்தாக்களுடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்ட பட்டியலில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தனது போர்ட்போலியாவில் சேர்த்துள்ள இந்த புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது (Prepaid Plans) இப்போது இந்த டெல்கோ வழங்கும் மிக விலையுயர்ந்த திட்டமாக உள்ளது.

ALSO READ | Best Broadband Plans: 100Mbps வேகம், வரம்பற்ற தரவுடன் கிடைக்கும் அசத்தலான திட்டங்கள்

ரூ.3,499 திட்டமானது, அதன் பயனர்களுக்கு 365 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளானின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டாவின் அளவு 1,095 ஜிபி ஆகும். ஒரு நாளில் 3 ஜிபி டேட்டாவை முடித்த பிறகு, ப்ரவுஸிங் வேகம் 64 கே.பி.பி.எஸ் வரை இந்த திட்டத்தில் குறையும். டேட்டா நன்மைகளை மட்டுமின்றி, இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவ எஸ்.எம்.எஸ்.களையும் வழங்கும்.

அத்துடன் இதில் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவைகள் அடங்கும். ஆனால் இந்தத் திட்டத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ 5 அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பு OTT தளத்திற்குமான சந்தாக்கள் இல்லை என்பதே உண்மை. 

ALSO READ | Vodafone-Idea Prepaid Plans: அசத்தல் சலுகை, Vi யின் டபுள் டேட்டா பிளான் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News