JIOPHONE 2021- தொலைத் தொடர்பு சந்தையில் நுழைவதற்குத் தயாராகும் Reliance Jio!

தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) 2G Mukt Bharat இன் கீழ் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2021, 04:24 PM IST
JIOPHONE 2021- தொலைத் தொடர்பு சந்தையில் நுழைவதற்குத் தயாராகும் Reliance Jio! title=

புது டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) பயனர்களுக்காக புதிய ஜியோபோன் 2021 சலுகையை (THE NEW JIOPHONE 2021 OFFER) கொண்டு வந்துள்ளது. JioPhone வாங்குவதற்கு வாடிக்கையாளர் 1999 ரூபாய் செலுத்த வேண்டும். இதனுடன், அவர் 2 ஆண்டுகள் வரை வரம்பற்ற அழைப்போடு மாதத்திற்கு 2 ஜிபி தரவையும் பெறுவார். இரண்டாவது திட்டம் ரூ .1499 ஆகும், இதில் வாடிக்கையாளருக்கு ஜியோபோனுடன் 1 வருடம் வரை வரம்பற்ற அழைப்போடு மாதத்திற்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

ரூ .749 இல் ஒரு வருடத்திற்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவு கிடைக்கும்
தற்போதைய ஜியோபோன் (JIOPHONE) வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை வழக்கியுள்ளது. மொத்தமாக ரூ .749 செலுத்தினால், அவர்கள் ஒரு வருட ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபடுவார்கள். வரம்பற்ற அழைப்பு மற்றும் 2 ஜிபி அதிவேக தரவுகளும் கிடைக்கும். இந்த சலுகை மார்ச் 1 முதல் இந்தியா முழுவதும் பொருந்தும். இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் சில்லறை மற்றும் ஜியோ (Jio) சில்லறை விற்பனையாளர்களிடமும் பெறலாம்.

ALSO READ | BSNL இன் அற்புதமான திட்டம், Unlimited Data கிடைக்கும்!

JIOPHONE 2021 சலுகை என்ன?
புதிய பயனர்களுக்கான இந்த புதிய JioPhone திட்டம் 2 ஆண்டுகளுக்கு பல இலவச அம்சங்களைப் பெறும். புதிய சலுகையில் (Reliance Jioஇப்போது வாடிக்கையாளர்களுக்கு 24 மாத வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற தரவு (2 ஜிபி அதிவேக தரவு) வழங்கும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், வாடிக்கையாளர் திட்டத்தை வாங்கியவுடன், அவர்கள் எந்த ரீசார்ஜ் செய்ய தேவையில்லை. பிற நெட்வொர்க்குகளை அணுக வாடிக்கையாளர்கள் சுமார் 2.5 சதவீதம் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News