Realme GT 5 விரைவில் அறிமுகம்: கசிந்த தகவல்கள் இதோ

Realme GT 5: Realme இன்னும் சில நாட்களில் ஒரு அற்புதமான போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விவரக்குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 21, 2023, 09:15 AM IST
  • கசிந்துள்ள படம், போனின் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே மிக மெல்லிய பெசல்களைக் கொண்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
  • ஒரு சிம் ஸ்லாட், மைக்ரோஃபோன் மற்றும் USB-C போர்ட் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை மொபைலின் அடிப்பகுதியில் காணப்படும்.
  • போனில் பிளாஸ்டிக் பிரேமுக்கு பதிலாக மெட்டாலிக் பிரேம் இருக்கும் என்று தெரிகிறது.
Realme GT 5 விரைவில் அறிமுகம்: கசிந்த தகவல்கள் இதோ title=

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ (Realme) இன்னும் சில நாட்களில் சீனாவில் ஒரு அற்புதமான போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கு ரியல்மீ ஜிடி 5 (Realme GT 5) என்று பெயரிடப்படும். தொலைபேசியின் விவரக்குறிப்புகள் அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கசிந்த ரெண்டர்கள் மற்றும் TENAA படங்களிலிருந்து போனின் வடிவமைப்பும் தெரியவந்துள்ளது. நம்பகமான டிப்ஸ்டரான டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் மூலம் வெய்போவில் கசிந்த ரெண்டரின் மூலம் தொலைபேசியின் முன் வடிவமைப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Realme GT 5 இல் என்ன சிறப்பம்சங்கள் இருக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Realme GT 5: வடிவமைப்பு

கசிந்துள்ள படம், போனின் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே மிக மெல்லிய பெசல்களைக் கொண்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. ஒரு சிம் ஸ்லாட், மைக்ரோஃபோன் மற்றும் USB-C போர்ட் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை மொபைலின் அடிப்பகுதியில் காணப்படும். போனில் பிளாஸ்டிக் பிரேமுக்கு பதிலாக மெட்டாலிக் பிரேம் இருக்கும் என்று தெரிகிறது. அதன் பெசல்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். டிப்ஸ்டர் இந்த போனை OnePlus Ace 2 Pro மற்றும் Redmi K60 Ultra உடன் ஒப்பிட்டுள்ளார். மற்ற ஃபிளாஷிப் போன்களுடன் ஒப்பிடும்போது இதன் அமைப்பு மிகவும் நன்றாக இருப்பதாக டிப்ஸ்டரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Realme GT 5: விவரக்குறிப்புகள்

Realme GT 5 ஆனது 1.5K தெளிவுத்திறனை வழங்கும். இது 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். முன்னதாக நிறுவனம் உறுதிப்படுத்தியபடி, GT5 இந்த மாதம் சீனாவில் அறிவிக்கப்படும். ஆனால் இந்த போன் எப்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. 

மேலும் படிக்க | சிறந்த 5 கேமரா போன்கள் - நீங்கள் இப்போது வாங்கலாம்

Realme GT 5: பேட்டரி

Realme GT 5 இரண்டு பேட்டரி வகைகளுடன் வரலாம். 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஒரு 4,600mAh பேட்டரி மற்றும் மற்றொன்று 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரி. ஃபோன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப் மூலம் இயக்கப்படும், இது 24 ஜிபி வரை ரேம் மற்றும் 1 ஜிபி வரை சேமிப்பகத்துடன் சக்தியூட்டுகிறது. 50 மெகாபிக்சல் (சோனி ஐஎம்எக்ஸ் 890) + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கேமராக்கள் கொண்ட ஃபோனில் டிரிபிள் கேமரா அமைப்பு கிடைக்கும். முன்பக்கத்தில் 16MP கேமரா இருக்கும்.

கூடுதல் தகவல்:

சில மாதங்களுக்கு முன்னர் ரியல்மீ (Realme) இந்தியாவில் ரியல்மீ நார்சோ 60 (Realme Narzo 60) தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த தொடரில் இரண்டு மாடல்கள் உள்ளன (Realme Narzo 60 மற்றும் Realme Narzo 60 Pro). இந்த ரியல்மீ போன் அறிமுகம் ஆகும் முன்னரே இதை பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன. போனின் சிறப்பம்சங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த போன் குறித்த எதிர்பார்ப்புகளும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் இடையே மிக அதிகமாகவே இருந்தது. 

Realme Narzo 60 சீரிசின் விலை மிக குறைவாக உள்ளது. எனினும் அதற்காக இதன் வடிவமைபில் எந்த குறையும் கூற முடியாது. இந்த போனின் வடிவமைப்பு ப்ரீமியம் தரத்தில் உள்ளது. இந்த போன் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் இருக்கும்  என மொபைல் போன் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Realme Narzo 60 தொலைபேசியின் பின்புறத்தில் ஒரு பெரிய வட்ட கேமரா ஐலேண்ட் உள்ளது. இது வீகன் லெதர் பேக் பதிப்பில் வருகிறது. வெண்ணிலா மாடலில் பிளாட் டிஸ்ப்ளே உள்ளது. ப்ரோ வளைந்த திரையை (கர்வ்ட் டிஸ்ப்ளே) கொண்டுள்ளது. ப்ரோ வேரியண்டில் பேனல் பெரிதாக இருப்பது மட்டுமல்லாமல், மிகச் சில பெசல்கள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

மேலும் படிக்க | Oppo 5G: 33 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போனுக்கு ரூ.27 ஆயிரம் தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News