POCO M3 Pro அறிமுகம், அசத்தலான பட்ஜெட் 5G போன்

POCO M3 Pro 5G ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2021, 08:02 PM IST
POCO M3 Pro அறிமுகம், அசத்தலான பட்ஜெட் 5G போன் title=

ஸ்மார்ட்போன்களின் உலகில் POCO தொடர்ந்து தனது இடத்தை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது M3 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. POCO தற்போது அதன் முதல் POCO M3 Pro 5G போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் POCO இன் M சீரிஸின் புதிய மொபைல் போனாக  அறிமுகப்படுத்தப்பட்டது. 

POCO M3 PRO  5ஜி சிறப்பம்சங்கள் என்ன
Poco M3 Pro ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன் உள்ளது. இதில் (5G Smartphone) கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசசஸர் மற்றும் மாலி G57 MC2 GPU உள்ளது. 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி மற்றும் 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. 

ALSO READ | Samsung புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும், அம்சங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்

டூயல் சிம் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12 அப்டேட் உள்ளது. 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 இதில் உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ மற்றும்  5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் இடிஜில் உள்ளது. 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. POCO  M3 Pro 5ஜி ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News