முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி?

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆனது ஃபேஸ் ஐடி அம்சத்தில் முகக்கவசம் அணிந்துகொண்டு அன்லாக் செய்வதை அறிமுகப்படுத்தி உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 05:39 PM IST
  • ஐபோன் அதன் லேட்டஸ்ட் அப்டேட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இதன் மூலம் முகக்கவசம் அணிந்து இருந்தாலும் அன்லாக் செய்யலாம்.
முகக்கவசம் அணிந்திருக்கும் போது போனை அன்லாக் செய்வது எப்படி? title=

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆனது தற்போது ஐஓஎஸ் 15.4 அப்டேட்டுடன் கிடைக்கிறது, இதில் சிறப்பு என்னவென்றால் ஃபேஸ் ஐடி அம்சத்தில் முகக்கவசம் அணிந்துகொண்டு பயனர்கள் அவர்களது ஐபோனை அன்லாக் செய்ய முடியும்.  முகக்கவசம் அணிந்துகொண்டு ஃபேஸ் ஐடியைப் பயன்படுத்தி ஆட்டோமேட்டிக்காக பாஸ்வேர்டை உள்ளிட முடியும்.  முகம் முழுவதுமாக தெரிந்தால் மட்டுமே ஐபோனை அன்லாக் செய்யலாம் என்று இருந்த நிலையில் தற்போது முகக்கவசம் அணிந்துகொண்டும் அன்லாக் செய்யும் அம்சம் வந்துள்ளது, இதில் அன்லாக் செயல்முறை எப்படி நடைபெறுகிறது என்றால் நம் கண்களை சுற்றியுள்ள பகுதிகளை இது ஸ்கேன் செய்து அதன் மூலம் அன்லாக் செய்ய அனுமதிக்கிறது.

iphone

மேலும் படிக்க | Amazon Fab Phones Fest: ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

இந்த ஐஓஎஸ் 15.4 அப்டேட்டை பெறுவதற்கு ஆப்பிள் ஐபோன் பயனர்கள் செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் செல்ல வேண்டும்.  இதனை அப்டேட் செய்ய கிட்டத்தட்ட 1.25 ஜிபி வரை ஆகும், அதனால் வைஃபை பயன்படுத்தி இதனை அப்டேட் செய்துகொள்ளலாம்.  நீங்கள் ஐபோனை அப்டேட் செய்யாமல் இருக்கும்பட்சத்தில் சேமித்துவைத்துள்ள தகவல்களின் அளவுகள் அதிகமாகிவிட வாய்ப்புகள் உண்டு. முககவசம் அணிந்திருக்கும் போதும் ஃபேஸ் ஐடி செயல்படும், அப்டேட் செய்ததும் இந்த வசதி செட்டிங்கில் இருக்கும்.  முகக்கவசம் அணிந்திருக்கும்போதே பயனர்கள்  ஃபேஸ் ஐடியில் ஆப்பிள் பே இயக்கலாம் மற்றும் பாஸ்வேர்டை ஆட்டோமேட்டிக்காக நிரப்பலாம்.  

இந்த அம்சமானது ஐபோன் 12ன் புதிய சாதனத்திற்கு மட்டுமே செயல்படுகிறது.  இதில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ப்ரோ மேக்ஸ், ஐபோன் ஆகியவை அடங்கும்.  ஆனால் ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் எக்ஸ்எஸ் சீரிஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகியவற்றில் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது, இதில் முகக்கவசத்தை அகற்றினால் மட்டுமே அன்லாக் செய்யலாம்.  மேலும் இந்த ஆப்பிளின் ஐஓஎஸ் 15.4 அப்டேட்டானது முகங்கள் போன்ற எமோஜிகள், கை சைகைகள் போன்றவற்றை வழங்குகிறது.

ஆஃப்லைனில் இருக்கும்போதும் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 11 போன்றவற்றில் சிரியை இயக்கலாம்.  மேலும் இந்த அப்டேட் அவசரகால எஸ்ஓஎஸ் செட்டிங்க்ஸையும் மாற்றியுள்ளது.  இதை பயன்படுத்த பயனர்கள் தற்போது ஹோல்ட் செய்யவேண்டும், மேலும் இதில் ஐந்து தடவை அழுத்தம் கொடுக்கும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.  ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸில் உள்ள அல்ட்ரா-வைட் கேமராவின் மூலம் மிக சிறிய அளவில் இருக்கும் பொருட்களையும் பெரிதுபடுத்தி பார்க்க முடியும்.  இருப்பினும் இவை சிறிது பிழைகளுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 3ஜி, 4ஜிக்கு டாடா, இந்தியா விரைவில் 6G அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News