ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகையை அறிவித்தது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனமும் 100% கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகையாக புதிய தண் தணா தண் சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகையை வழங்கிவருகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 திட்டத்தின் கீழ் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.349 சலுகையில் மை ஏர்டெல் செயலி மூலம் ஏர்டெல் பேமென்ட் பேங்கில் ரீசார்ஜ் செய்யும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் ஏர்டெல் பேமென்ட் பேங்க் கணக்கில் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இதேபோன்று இதே கணக்கில் அடுத்த ஆறு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்தவகையில் ஏர்டெல் பேமென்ட் பேங்க் கணக்கில் ஏழு மாதங்களில் ரூ.350 கேஷ்பேக் பெற முடியும். ஏர்டெல் ரீசார்ஜ் செய்த மூன்று நாட்களுக்குள் கேஷ்பேக் தொகை ஏர்டெல் பேமென்ட் பேங்க் வேலெட் அல்லது சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள ஏர்டெல் ரூ.349 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. குறைந்த கால சலுகையாக வழங்கப்படும் இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.