புதுடெல்லி: பின்லாந்தின் தொலைபேசி தயாரிப்பாளரான நோக்கியா இப்போது மடிக்கணினி சந்தையிலும் இறங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின்படி, நோக்கியாவின் மடிக்கணினி (Laptop), நவம்பர் 27 ஆம் தேதி இந்திய தரநிலை பணியகத்தின் (BIS) இணையதளத்தில் காணப்பட்டது. இது, நோக்கியா நிறுவனம் விரைவில் தனது லேப்டாப்பை சந்தையில் கொண்டு வரும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், தற்போது Laptop தொடர்பான எந்த தகவலையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிரவில்லை.
எங்கள் கூட்டாளர் ஜீபிஸ்.காம்-ன் படி, பிஐஎஸ் பட்டியலின் படி, Nokia-வின் லேப்டாப் சீனாவில் டோங்ஃபாங் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் நோக்கியா பிராண்டின் கீழ் 9 மடிக்கணினிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும். இந்த மடிக்கணினிகளின் மாடல் எண்கள் NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi510UL1610S, NKi310UL41S, NKi310UL42S, NKi310UL82S மற்றும் NKi310UL8 என பட்டியலிடப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன்கள் (Smartphone), ஃபீச்சர் தொலைபேசிகள் மற்றும் மொபைல் பாகங்கள் ஆகியவற்றிற்காக நோக்கியா பிராண்டிற்கு எச்எம்டி குளோபல் உரிமம் வழங்கியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்ட்ரீமிங் சாதனங்கள், டி.வி மற்றும் இப்போது, நோக்கியாவின் எஞ்சிய போர்ட்ஃபோலியோவில், மடிக்கணினிகளுக்கு தனி உரிமம் தேவை. நோக்கியா தனது ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் பிளிப்கார்ட்டுடனான உரிமத்தில் விற்கிறது. மடிக்கணினியின் விற்பனையிலும் இதேபோல் நடக்கலாம்.
ALSO READ: Netflix Stream Fest: டிசம்பரில் இந்த நாட்களில் Netflix முற்றிலும் இலவசம், விவரம் உள்ளே
இந்த மடிக்கணினிகள் அனைத்தும் Intel Core i3 மற்றும் Intel Core i5 ப்ராசசர்களுடன் அறிமுகப்படுத்தப்படும். இது தவிர, இவை அனைத்தும் விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன் வரும். தற்போது, இந்த மடிக்கணினிகளைப் பற்றி வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அவற்றின் விலை மற்றும் சேமிப்புத் திறன் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் பாக்ஸ் போன்ற நோக்கியா பிராண்ட் தயாரிப்புகளைப் போலவே, இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டிலும் (Flipkart) பிரத்யேக விற்பனையில் இவை கிடைக்கலாம்.
ALSO READ: Tech Tip: WhatsApp-ல் ஆஃப்லைனில் அரட்டை அடிக்கலாம் என உங்களுக்குத் தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR