Nokia நிறுவனமானது தனது புதுவரவான Nokia 6.1 Plus-னை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிரபல மொபைல் நிறுவனமான Nokia வரும் ஆகஸ்ட் 21-ஆம் நாள் தனது புதுரக போன்களை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது தனது ட்விட்டர் கணக்கின் மூலம் புதுமொபைல் அறிமுகத்தினை குறித்து பதிவிட்டுள்ளது.
We are thrilled to bring you the Nokia smartphones event for the most awaited phone. Stay tuned to #BringItOn with #NokiaMobile pic.twitter.com/v1ZHBnTSri
— Nokia Mobile India (@NokiamobileIN) August 16, 2018
இந்த பதிவில் Nokia நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது... "உங்களின் விருப்பமான மொபைல்களுடன் விரைவில் தொடர்புகொள்ள காத்திருக்கின்றோம். #BringItOn-க்கா காத்திருங்கள்" என பதிவிட்டுள்ளது.
இந்த பதிவின் மூலம் Nokia பல புது வரவுகளை வெளியிட காத்திருக்கின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்களின் கருத்துப்படி இந்த அறிவிப்பானது Nokia 6.1 Plus-ன் வெளியீட்டிற்கான குறிப்பு என்றே கருதப்படுகிறது.
Nokia 6.1 Plus ஆனது ஏற்கனவே உலக மொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே வெளியாகவுள்ளது எனவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
Nokia 6.1 Plus-ன் சிறப்பம்சங்கள்...
- 2.5D கொரிலா கண்ணாடியுடன் கூடிய 5.8" முழு HD+ திரை
- 4GB RAM மற்றும் 64GB உள் நினைவகம்.
- 3060mA மின்கலன்
- 16MP+5MP என இரண்டு பின் கேமிரா, 16MP முன்கேமிரா.
- Android 8.1 Oreo மென்பொருள்.
- 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS என பல பயன்பாடுகளையும் கொண்டுள்ளது!