இயர்பட்ஸ் யூஸ் பண்ணறீங்களா.... இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க

ஸ்மார்போன் வைத்திருப்பவர்களிடம் இருக்கும் மிக முக்கிய கேட்ஜெட்டுகளில் ஒன்று இயர்பட்ஸ். இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முன்ன்பெல்லாம் இயர்போன் அதிக பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது வயர்லெஸ் இயர்பட்ஸ் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 1, 2024, 06:40 PM IST
  • மின்னணு பொருட்களைக் கவனமாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்
  • இயர்பட்களை தொடர்ந்து சார்ஜ் செய்வதால் பேட்டரி சேதமடையலாம்.
  • தற்போது வயர்லெஸ் இயர்பட்ஸ் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.
இயர்பட்ஸ் யூஸ் பண்ணறீங்களா.... இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க title=

ஸ்மார்போன் வைத்திருப்பவர்களிடம் இருக்கும் மிக முக்கிய கேட்ஜெட்டுகளில் ஒன்று இயர்பட்ஸ். இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. முன்ன்பெல்லாம் இயர்போன் அதிக பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது வயர்லெஸ் இயர்பட்ஸ் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. மின்னணு பொருட்களைக் கவனமாகப் பயன்படுத்தவில்லை என்றால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் சாம்சங் இயர்போனை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, அது திடீரென அது வெடித்துச் சிதறியதில், அதனை பயன்படுத்திய பெண் தன காது கேட்கும் திறனை இழந்ததாக செய்தி பரவியது.

பல சமயங்களில் நாம் எலக்ட்ரானிக் சாதனங்களை முறையாகப் பயன்படுத்தாததால் அவை விரைவில் பழுதடையும் வாய்ப்பு உள்ளது. இயர்பட்களை சேதப்படுத்தக்கூடிய சில தவறுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இயர்பட்கள் நீண்ட காலம் நீடிக்க, சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். இதனுடன், ஆபத்துக்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் அறிந்து கொள்வோம்.

இயர்பட்களை நீண்ட நேரம் அல்லது அதிக ஒலி அளவில் பயன்படுத்தினால், அவற்றின் ஸ்பீக்கர்கள் சேதமடையலாம். இது ஒலி தரத்தை பாதிக்கலாம். இயர்பட்கள் சேதமடையலாம். ஒலியளவை நடுத்தர அளவில் வைத்திருங்கள் மற்றும் நீண்ட நேரம் இயர்பட்களைப் பயன்படுத்த வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் செவித்திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

அதிக அளவில் சார்ஜ் செய்தல் மற்றும் டிஸ்சார்ஜ் ஆகுதல்

இயர்பட்களை தொடர்ந்து சார்ஜ் செய்வதால் பேட்டரி சேதமடையலாம். அதே போல் பேட்டரியை முழுமையாக தீர்ந்து போகும் வரை பயன்படுத்தி அதன டிஸ்சார்ஜ் செய்வதன் மூலம் அதன் ஆயுட்காலம் குறையும். இயர்பட்களின் பேட்டரியை 20% - 80% என்ற அளவில் பாராமரிக்கும் அளவிற்கு சார்ஜ் செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கவும். பேட்டரியை அதிகமாக சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.

தண்ணீர் அல்லது ஈரப்பதம் ஏற்படாமல் பாதுகாத்தல்
 
பெரும்பாலான இயர்பட்கள் இப்போது நீர்ப்புகா மாடலாக இருந்தாலும், அவற்றை நீர் அல்லது ஈரப்பதத்திலிருந்து விலக்கி வைப்பதே நல்லது. குறிப்பாக குளிக்கும் போது அல்லது மழையின் நனையும் போது இயர்பட்களை பயன்படுத்த வேண்டாம். தண்ணீர் அல்லது வியர்வை எலக்ட்ரானிக் சர்க்யூட்களை சேதப்படுத்தும், இதனால் இயர்பட்கள் சரியாக வேலை செய்யாமல் போகலாம். இயர்பட்கள் ஐபி மதிப்பீட்டைக் கொண்டிருந்தாலும் (நீர்ப்புகா அல்லது வியர்வைப்புகா), அவற்றை முடிந்தவரை ஈரப்பதத்திலிருந்து விலக்கி வைக்கவும்.

மேலும் படிக்க | உங்கள் போனில் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை

பல சாதனங்களை இணைப்பதை தவிர்க்கவும்

ஒரே நேரத்தில் பல சாதனங்களுடன் இயர்பட்களை அடிக்கடி மாற்றி மாற்றி இணைப்பது மற்றும் இணைப்பது நீக்குவது மென்பொருள் சிக்கல்களை ஏற்படுத்தலாம். இது இணைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தேவையற்ற வகைகள் சாதனங்களை இணைத்து மாற்றுவதை தவிர்க்கவும்.

இயர்பட்களை சரியாக பாதுக்காமல் வைத்தல்

பயன்பாட்டிற்குப் பிறகு இயர்பட்களை கேஸில் சரியாக வைக்க வேண்டும். அவற்றை அப்படியே போட்டுவிடுவது அல்லது தாறுமாறாக வைத்திருப்பது இயர்பட்ஸ்களை சேதப்படுத்தலாம். எப்பொழுதும் இயர்பட்களை அவற்றின் சார்ஜிங் கேஸ் அல்லது பெட்டியில் வைக்கவும், இதனால் அவை பாதுகாப்பாக இருக்கும்.

இயர்பட்களை அடிக்கடி கீழே போடுதல்

இயர்பட்களை அடிக்கடி தவறுதலாக கீழே போடுவது அல்லது மோசமாக கையாளுவது அவற்றின் உள் சுற்றுகளை சேதப்படுத்தும். மென்மையான சாதனங்களான இவற்றை கவனமாக பராமரிக்க வேண்டும். இயர்பட்களை கவனமாகப் பயன்படுத்தவும், அவை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளவும்.

இயர்பட்களை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்

இயர்பட்களை அவ்வப்போது சுத்தம் செய்யாததால், அவற்றில் தூசி, அழுக்கு மற்றும் காது மெழுகு படிந்து, அவற்றின் ஒலி தரம் பாதிக்கப்படுவம். சேதமடையவும் கூடும். மென்மையான துணி அல்லது பிரெஷ் மூலம் இயர்பட்களை தவறாமல் சுத்தம் செய்யவும். ஒரு போதும் ரசாயனம் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் படிக்க | மொபைல் போனை பாதிக்கும் ஆபத்தான வைரஸ்... இந்த செயலிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News