பாஸ்வேர்ட் பகிர்வை குறைக்க நெட்பிளிக்ஸ் மறைமுக திட்டம் - இனி விளம்பரமும் வரும்...!

அதிகமாக கணக்கின் பாஸ்வேர்டை பகிரப்படுவதை தடுக்க நெட்பிளிக்க புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்த நிலையில், அதை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.  

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2022, 05:11 PM IST
  • இதுவரை நெட்பிளிக்ஸ் கணக்கின் தகவல்களை பகிர முடியாது.
  • புதிய வசதி மூலம் கணக்கின் பல தகவல்களை பகிரலாம்.
பாஸ்வேர்ட் பகிர்வை குறைக்க நெட்பிளிக்ஸ் மறைமுக திட்டம்  - இனி விளம்பரமும் வரும்...! title=

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், சமீபத்தில் 'Profile Transfer' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்வதை தடுக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த சேவை நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

அனைவராலும் வேண்டப்பட்ட இந்த 'Profile Transfer' வசதியானது, நெட்பிளிக்ஸில் நீங்கள் பார்த்தவை குறித்த தகவல்கள், பார்க்க நினைத்து குறித்துவைத்தவை, சேமித்து வைக்கப்பட்ட கேம்கள் மற்றும் சிலவற்றை பகிர்ந்துகொள்ளலாம். 

நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி புது கணக்கை தொடங்கும்போது, பழைய கணக்கில் இருக்கும் உங்களின் தகவல்களை அதில் மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. 

ஆனால், உங்களின் பண பரிவர்த்தனை தகவலையோ அல்லது குழந்தைகள் கணக்கின் தகவலையோ பகிர்ந்துகொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ரூ. 21,000 அசத்தல் விவோ போனின் விலை வெறும் ரூ. 990: பிளிப்கார்ட் அதிரடி

நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்நுழையும் போது, ஆப்ஸ் மற்றும் இணையத்தில் 'Profile Transfer' வசதியை தடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வீடியோவிற்கு இடையில் விளம்பரத்தையும் ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது. சில நாடுகளில் அடிப்படை தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் விளம்பரங்களை வரும் நவ. 3ஆம் தேதி முதல் ஒளிபரப்படும் என தெரிவித்துள்ளது. 

மேலும், 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாஸ்வேர்ட் பகிர்வதை ஒட்டுமொத்தமாக தடுக்க திட்டமிட்டுள்ளதாக நெட்ஃபிக்ஸ் சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Linkedin-ல் வலைவீசும் இளம் பெண்கள்! உஷார் மக்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News