அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பீச்சர் ஃபோனை முகேஷ் அம்பானி இன்று அறிமுகம் செய்தார். இந்தியாவில் ஜியோ பீச்சர் ஃபோனை இலவசமாக வழங்குவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
தற்போது வாடிக்கையாளர்கள் ரூபாய் 1500 வைப்பு இருப்பு தொகைனை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார்.
ஜியோ பீச்சர் ஃபோனின் சிறப்பம் அம்சங்கள் பின்வருமாறு:-
> 2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்.பி.ரேம், 128ஜிபி மைக்ரோ எஸ்.டி. டூயல் சிம்,
> 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, வி.ஜி.எ. முன்பக்க கேமரா, 2000
> எம்.எ.எச்.பேட்டரி திறன், எஃப்.எம் ரேடியோ, ப்ளுடூத் 4.1, வீடியோ காலிங்
இந்தியாவில் ஜியோ ஃபீச்சர் ஃபோனின் விலை ரூ.500 இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவில் ஜியோ பீச்சர் ஃபோனை இலவசமாக வழங்குவதாக முகேஷ் அம்பானிஅறிவித்து உள்ளதால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
முன்னதாக முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி போனைப் பற்றிய முக்கிய அம்சங்களை விளக்கினார்.