நாட்டில் உள்ள எந்தவொரு கணினி, மொபைலினை கண்கானிக்க, தேவைப்பட்டால் பயன்படுத்த 10 அமைப்புகளுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது!
சமூகவலைதளம், கணினி போன்றவற்றில் இருக்கும் தனிநபர் தகவல்களை, உரையாடல்களை முறையான அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தவோ, கண்காணிக்கவோ முடியாது. அவ்வாறு தகவல்களை கண்காணிப்பதும், கசியவிடுவதும் மிகப்பெறிய குற்றமாகும்.
இந்தநிலையில், நாட்டில் உள்ள எந்தவொரு தனிநபர் தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
MHA: Competent authority hereby authorizes the following security and intelligence agencies (in attached statement) for purposes of interception, monitoring and decryption of any information generated, transmitted, received or stored in any computer resource under the said act pic.twitter.com/3oH9e7vv6T
— ANI (@ANI) December 21, 2018
இந்த ஆணையின் படி.,
- Intelligence Bureau (உளவுத்துறை)
- Narcotics Control Bureau (போதை பொருள் தடுப்பு பிரிவு)
- Enforcement Directorate (அமலாக்க இயக்குநரகம்)
- Central Board of Direct Taxes (வருவாய் புலனாய்வு அமைப்பு)
- Directorate of Revenue Intelligence (நேரடி வரி விதிப்பு ஆணையம்)
- Central Bureau of Investigation
- National Investigation Agency (தேசிய புலனாய்வு அமைப்பு)
- Cabinet Secretariat(RAW) (கேபினட் செயலகம்)
- Directorate of Signal Intelligence(For service areas of Jammu & Kashmir, North-East and Assam only) (சிக்னல் புலனாய்வு இயக்குநரகம்)
- Commissioner of Police, Delhi (டெல்லி காவல் ஆணையர் அலுவலகம்)
ஆகிய இந்த 10 அமைப்புகளும் எந்த அனுமதி இல்லாமலும் யாரை வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.