Hyundai கார் வாங்க இதுவே சரியான நேரம், அதிரடி தள்ளுபடி அறிவிப்பு

Hyundai Cars Discount: தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ஹூண்டாய் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. நிறுவனம் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி அளிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 9, 2023, 02:34 PM IST
  • இந்த கார்களில் மிகப்பெரிய தள்ளுபடி.
  • ரூ.1.5 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.
  • அசத்தல் சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கும்.
Hyundai கார் வாங்க இதுவே சரியான நேரம், அதிரடி தள்ளுபடி அறிவிப்பு title=

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பன்முக கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது அதற்கான சரியான் நேரமாகும். அதன்படி நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஹூண்டாய் கார்களில் தள்ளுபடி
இந்த நிலையில் நிறுவனம் அளித்த தகவலின்படி, ஹூண்டாய் ஆரா மீது ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி 28 பிப்ரவரி 2023 வரை மட்டுமே வழங்கப்படும்.

மேலும் படிக்க | 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் பிளான், அள்ளித்தரும் BSNL

* ஹூண்டாய் ஆரா சப்-4 சீட்டர் செடான் காருக்கு ரூ.10,000 ரொக்க தள்ளுபடி.
* ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.
* ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படும். 

இதன் மூலம், ஹூண்டாய் ஆரா மீது மொத்தம் ரூ.33,000 தள்ளுபடியைப் பெறலாம்.

ஹூண்டாய் ஆரா 
இந்தக் காரில் 30 விதமான பாதுகாப்பு அம்சங்கள், 4 ஏர் பேக்குகள் உள்ளன. இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டயர் காற்றழுத்த கண்காணிப்பு கருவி, விரைவாக சார்ஜ் ஆகும் யு.எஸ்.பி. வசதியுடன், மிக அழகிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், பகலில் ஒளிரும் விளக்கு மற்றும் முன்புற பம்பர் ஆகியன காரின் தோற்றப் பொலிவை மேலும் மெருகேற்றுகிறது. முன்புற பம்பரின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதோடு அதன் அகலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரம், குரோமியத் தாலான கதவு கைப்பிடிகள், அழகிய பின்புற ஸ்பாயிலர் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல், வெகிஹிள் ஸ்டெபிலிடி நிர்வாகம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 5 மேனுவல் கியர்கள் உள்ளிட்ட சிறப்பம் சங்களைக் கொண்டது. யாராவது காரை திருட முயன்றால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதியும் கொண்டது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல்வழி கட்டுப்பாட்டு வசதி, புளூடூத் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன. குரூயிஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் சாவி வசதி கொண்டது. இவற்றில் மேனுவல் கியர் வசதி மற்றும் தானியங்கி கியர் வசதி உள்ள மாடல்கள் உள்ளன. இதில் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலும் வந்துள்ளது.

 

அதேபோல் நிறுவனம் மற்ற கார்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்குகிறது. அதன்படி ஸ்போர்ட்ஸ் மற்றும் மேக்னாவுக்கு ரூ.20,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

* ரொக்க தள்ளுபடி ரூ.10,000. 
* ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.  

இதேபோல், நிறுவனம் தனது சிறந்த விற்பனையான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.13,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. 

* ரூ.10,000 ரொக்க தள்ளுபடி 
* ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி சலுகை அடங்கும்.

மேலும் படிக்க | இந்தியாவிற்கும் வந்தது ட்விட்டர் ப்ளூ டிக்! மாதம் எவ்வளவு தொகை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News