மாருதி கார் பிரியர்களுக்கு முக்கிய செய்தி. நீங்கள் மாருதி சுஸுகி காரை வாங்க திட்டமிட்டிருதால், இந்த விவரங்களை தெரிந்துகொள்வது நல்லது. நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி, தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 1 முதல், பல கார் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.
நீங்கள் மாருதி கார் வாங்க திட்டம் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்துவது நல்லது. இல்லையெனில், நீங்கள் காருக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் முன்பதிவு செய்த அதே விலையில் டீலர்கள் உங்களுக்கு காரை விற்பனை செய்வார்கள் என்பதால், விலை உயர்வுக்கு முன் நீங்கள் விரும்பும் காரையும் முன்பதிவு செய்யவது நல்லது. விலை உயர்த்தப்பட்ட பிறகு டெலிவரி கிடைத்தாலும், முன்பதிவு செய்யும்போது இருந்த விலையைதான் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.
இதுவே அதிகரிப்புக்குக் காரணம்
ஒரு ஒழுங்குமுறை தாக்கல் அதாவது பங்குச் சந்தைகளுக்கு அனுப்பப்பட்ட தகவலில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, கடந்த ஓராண்டில் உள்ளீடு செலவு அதிகரிப்பு நிறுவனத்தை பாதித்துள்ளது என்று கூறியுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு தற்போது வாகனங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு மாடலுக்கு மாடல் மாறுபடும்.
மேலும் படிக்க | மின்சார வாகன சந்தையை கலக்க வருகிறது டாடாவின் புதிய இவி: அறிமுக தேதி, விவரங்கள் இதோ
விலை எவ்வளவு, எப்போது அதிகரிக்கும்
ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில், நிறுவனம் ஏப்ரல் 2022 முதல் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இருப்பினும், நிறுவனம் இன்னும் இதற்கான சரியான தேதியை அறிவிக்கவில்லை. அதாவது விலை உயர்வு இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். மேலும் எவ்வளவு விலை உயரும் என்பதை நிறுவனம் தெரிவிக்காத நிலையில், இதுவரை விலையை உயர்த்தியுள்ள கார் நிறுவனங்களை கருத்தில் கொண்டு, 5 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
முன்னதாக, ஜனவரி 2021 முதல் மார்ச் 2022 வரை, மாருதி சுசுகி கார்களின் விலையை சுமார் 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தையில், நிறுவனம் ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரை 15 மாடல்களை விற்பனை செய்கிறது. இவற்றில் 9 சிஎன்ஜி பதிப்பும் கிடைக்கிறது.
மேலும் படிக்க | ஹீரோ இரு சக்கர வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: ஏப்ரல் மாத பம்பர் ஆஃபர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR