Greta: அட்டகாசமான அம்சங்களுடன் அசத்தல் விலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

நிறுவனம் ஹார்பர், ஈவ்ஸ்பா, கிளைடு மற்றும் ஹார்பர் இசட்எக்ஸ் ஆகிய நான்கு வகை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.60,000 முதல் ரூ.92,000 வரை உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2021, 05:37 PM IST
Greta: அட்டகாசமான அம்சங்களுடன் அசத்தல் விலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் title=

புது தில்லி: குஜராத்தைச் சேர்ந்த கிரேட்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் நான்கு புதிய மின்சார மின்சார இரு சக்கர சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனம் ஹார்பர், ஈவ்ஸ்பா, கிளைடு மற்றும் ஹார்பர் இசட்எக்ஸ் ஆகிய நான்கு வகை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.60,000 முதல் ரூ.92,000 வரை உள்ளது.

இந்த மின்சார ஸ்கூட்டர்கள் (Electric Scooter) மூலம், போக்குவரத்தை மலிவாகவும் எளிதாகவும் செய்ய கிரேட்டா முயற்சித்துள்ளது. மின்சார ஸ்கூட்டர்களுடன் அதிநவீன தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளதாக மின்சார வாகன தயாரிப்பாளரான கிரேட்டா கூறியுள்ளது.

இந்த ஸ்கூட்டர்களை பல்வேறு வண்ணங்களில் வாங்கலாம்

கிரெட்டா ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் வெவ்வேறு ஸ்டைலிங் மற்றும் டிசைனை வழங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஹார்பர் மற்றும் ஹார்பர் ZX ஆகிய இரண்டுக்கும் ஸ்போர்ட்டியான தோற்றமும் பரந்த முன்பக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

ALSO READ:அறிமுகம் ஆகிறது OPPO-வின் மிக மலிவான மின்சார ஸ்கூட்டர்: கசிந்த விவரங்கள் இதோ 

இந்த இரண்டையும் வேறுபடுத்தும் பகுதி ஹெட்லேம்ப் ஆகும். ஹார்ப்பரில் இது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஹார்பர் ZX-ல் சிங்கிள் யூனிட் ஹெட்லேம்ப் உள்ளது. இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதிரியான ஹேண்டில்பார் கால், ரியர்வியூ கண்ணாடிகள் மற்றும் இருக்கைகள் உள்ளன. ஸ்கூட்டர்களில் பின் பக்கம் அமரும் பயணிகளுக்கு வசதியாக பேக்ரெஸ்ட் உள்ளன.

1 முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம்

Evespa என்பது விண்டேஜ் ஸ்டைல் ​​ஸ்கூட்டர் (Vintage Scooter) ஆகும். இது பெட்ரோலில் இயங்கும் வெஸ்பா ஸ்கூட்டரைப் போன்றது. இதில், வளைந்த பாடி பேனல்கள், உருண்டையான ஹெட்லேம்புகளுடன் உருண்டையான பின்பக்க கண்ணாடி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

நான்காவது ஸ்கூட்டரான க்ளைடு, இன்றைய ஸ்டைல் ​​மற்றும் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு இ-ஸ்கூட்டர்களும் 48V/60V லித்தியம்-அயன் பேட்டரியுடன் வருகின்றன. இவற்றை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100கிமீ வரை இயக்க முடியும். இந்த ஸ்கூட்டர்களில் ரிவர்சிங் மோட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஸ்கிரீன், கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் ஆண்டி-தெஃப்ட் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ALSO READ:Electric Vehicles: எலெக்ட்ரிக் கார்கள் எப்படி வேலை செய்கின்றன? இப்படித்தான்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News