உஷார் மக்களே! இந்த சிறிய தவறு உங்கள் பேங்க் பேலன்ஸை காலியாக்கிவிடும்; ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனம்

பண்டிகை காலமான தீபாவளி நெருங்கிவிட்டதால், ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனமாக இருக்காவிட்டால், உங்களின் பேங்க் பேலன்ஸ் மொத்தமாக காலியாகிவிடும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2022, 06:57 AM IST
  • ஆன்லைன் ஷாப்பிங் மோசடி
  • பண்டிகை காலத்தில் உஷார்
  • வங்கி பணம் முழுவதும் காலியாகிவிடும்
உஷார் மக்களே! இந்த சிறிய தவறு உங்கள் பேங்க் பேலன்ஸை காலியாக்கிவிடும்; ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனம் title=

Online Diwali Shopping: இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது டிரெண்டாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனைத்து வகையான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பண்டிகை நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாக நடைபெறுகிறது. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் இந்த நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இப்போதெல்லாம் போலி வலைத்தளங்களை உருவாக்கி, அவற்றில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களிடமிருந்து பணம் ஏமாற்றப்படுகிறது.

மோசடி கும்பலின் பொறி

நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளங்கள் உண்மையானது தானா என்பதை ஒருமுறைக்கு இருமுறை செக் செய்து கொள்ளுங்கள். மேலும், எந்த இணையதளத்தில் ஆர்டர் செய்தாலும் காஷ் ஆன் டெலிவரி கொடுப்பது சிறந்தது.ஆஃபர் சலுகைகளுக்காக ஆன்லைன் பேமெண்ட் செய்தால், மோசடியாளர்களின் பொறியில் சிக்கி உங்கள் பணம் கிடைப்பது மிகவும் சிரமமாகிவிடும். 

மேலும் படிக்க| உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள் - பேஸ்புக் விடுத்த எச்சரிக்கை

போலி இணையதளங்கள்

அண்மையில் டெல்லி காவல்துறை இப்படியான போலி இணையதளங்களை நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த நபர்களை கைது செய்தது. அவர்கள் அனைவரும் பிரபலமாக இருக்கும் Shine.com (HT Media Limited), Shoppers Stop, Dabur India Limited மற்றும் Indiamart போன்ற முக்கிய நிறுவனங்களின் பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி டீலர்ஷிப்களை வழங்கி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி காவல்துறைக்கு பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அதனால், ஷாப்பிங் செய்யும் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம். 

லிங்குகளில் வரும் சிக்கல்

பண்டிகை காலங்களில் வாட்ஸ் அப் மற்றும் இமெயில் மூலம் சில கவர்ச்சிகரமான ஆஃபர்களை உள்ளடக்கிய லிங்குகள் வருவதை பார்த்திருப்பீர்கள். அந்த லிங்குகள் பெரும்பாலும் மோசடியாளர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வாய்ப்புகள் உண்டு. பிரபலமான நிறுவனங்கள் பெயரில் உருவாக்கப்பட்ட அந்த லிங்குகளில் கவர்ச்சிகரமான ஆஃபர் இருக்கிறது என நீங்கள் கிளிக் செய்தால், உங்களின் வங்கி தகவல்களை திருடி, மொத்த பேலன்ஸையும் காலி செய்து விடுவார்கள். இதில் நீங்கள் உஷாராக இருப்பது அவசியம். 

மேலும் படிக்க | குறைந்த விலையில் 5ஜி ஃபோன்... களமிறங்கும் லாவா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News