தீபாவளி சீசன் தொடங்கியுள்ள நிலையில், இ-காமர்ஸ் இணையதளங்கள், வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு சிறந்த சலுகைகளை அள்ளி அள்ளி வழங்குகிறது. Amazon, Flipkart, ShopClues மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்கள், சிறந்த சலுகைகளை வழங்குகின்றன.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தவறான இணைப்புகளைக் கிளிக் செய்து மோசடிகளுக்கு இரையாகிறார்கள். பல இணையதளங்கள் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், கணினிகள், உடைகள், மரச்சாமான்கள், வீட்டு சாதனங்கள் மற்றும் எல்லாவற்றிலும் அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளன.
ALSO READ | Amazon Festival Sale: Oppo போன்களில் சிறந்த சலுகைகள்
ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தும் போது, தாங்கள் எந்த இணைதளத்தில் உள்நுழைகிறோம், எப்படி பணம் செலுத்துகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை காலி செய்து விடக் கூடும். ஆன்லைனில் ஷாப்பிங் (Online Shopping) செய்யும் போது ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
ஆன்லைனில் ஷாப்பிங்கை பாதுகாப்பாக செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்:
1. URL https:// உடன் தொடங்கும் இணைய தளத்தில் மட்டுமே ஷாப்பிங் செய்யுங்கள்.
2. இணைய தளத்தின் பாதுகாப்பு நிலையை அறிந்து கொள்ள, URL அருகில் உள்ள பூட்டு ஐகானைக் கிளிக் செய்யவும்.
3. Amazon, Flipkart, ShopClues, Pepperfry மற்றும் பிற பிரபலமான இணையதளங்களிலேயே எப்போதும் ஷாப்பிங் செய்யுங்கள்.
4. நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போதெல்லாம், வைரஸ் தடுப்பு மற்றும் ஃபயர்வால் மென்பொருள் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. ஆன்லைனில் ஏதேனும் தகவலைக் கேட்டால், அதைப் புறக்கணிக்கவும்.
ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!!
6. அந்நியர்களால் அறிவுறுத்தப்படும் செயலிகளை நிறுவ வேண்டாம்.
7. தெரியாத நபர் கொடுத்த இணைப்பை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
8. உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றவும்.
9. உங்கள் தனிப்பட்ட நிதித் தகவலை வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கில் மட்டுமல்லாது, குடும்ப உறுப்பினர்களுடன் கூட பகிர வேண்டாம்.
10. இலவச மதிய உணவு அல்லது ஷாப்பிங் அல்லது பயணத்திற்கான சலுகை என ஈர்க்கும் இணைப்புகளை கிளிக் செய்யும் போது, மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கு தரவுகள் திருடப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ALSO READ: Amazon Great Indian Festival:ரூ.8000-ஐ விட குறைவான விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR