சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி...

சாட்ஜிபிடியுடன் வாட்ஸ்அப்-ஐ நீங்கள் தாரளமாக இணைக்கலாம். அதற்கான வழிமுறை குறித்து இங்கே தெளிவாக பார்க்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 05:49 PM IST
சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி... title=

டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு செயலிகளின் செயல்பாட்டில் பங்கெடுத்திருக்கும் சாட்ஜிபிடி-ஐ வாட்ஸ்அப் உதவிக்கும் நீங்கள் அழைக்கலாம். பயனாளர்கள் விரும்பினால் தங்களுக்கு வரும் சாட்களின் ரிப்ளைக்கு, ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதனை பேஸ்புக் நிறுவனமும், அதன் தாய் நிறுவனமான மெட்டாவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. மாறாக சாட்ஜிபிடியை வாட்ஸ்அப் செயலிக்கு பயன்படுத்தும் முறையை பிரபல டெவலப்பரான டேனியல் உருவாக்கியுள்ளார். 

அவர் கொடுத்திருக்கும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் வாட்ஸ்அப் செயலி சாட்களை சாட்ஜிபிடி-ஆல் தானாக மேற்கொள்ள முடியும். இங்கே டேனியல் கொடுத்திருக்கும் வாட்ஸ்அப் சாட்ஜிபிடிக்கான கோட்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன்பின் language library-க்கு அக்சஸ் கொடுக்கவும்.

மேலும் படிக்க | ChatGpt: வாட்ஸ்அப்-ல் உங்களுக்கு பதிலாக பதில் அளிக்கும்..! எப்படி தெரியுமா?

சாட்ஜிபிடியை வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி?  

* மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை பயன்படுத்தி வாட்ஸ்அப் சாட்ஜிபிடிக்கான ஜிப் பைல் இணைப்பை பதவிறக்கிக் கொள்ளவும்.
* அதில் டெர்மினல் ஆப்சனை ஓபன் செய்து “WhatsApp-gpt-main” என்ற ஃபைலை தேர்ந்தெடுக்கவும்.
* பின்னர் டெர்மினலில் இருக்கும் “server.py” program-ஐ கிளிக் செய்து ரன் கொடுக்கவும்.
* இதன்பிறகு ‘Is’ என என்டர் செய்து கிளிக் புரோசீட் கொடுக்கவும்
* அதில் “python server.py.” என என்டர் செய்யவும்
* இதனை நீங்கள் செய்தவுடன் உங்கள் மொபைல் எண் தானாகவே ஓபன்ஏஐ சாட் பக்கத்தில் இணைந்துவிடும். 
* இப்போது உங்கள் வாட்ஸ்அப்-ல் சாட்ஜிபிடி அம்சத்தை நீங்கள் காண்பீர்கள்

மேலும் படிக்க | ChatGPT: இடியாப்ப சிக்கலில் சீனா..! புதிய ஏஐ உருவாக்க திட்டம்

மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Trending News