சில சமயங்களில் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை தவறவிடலாம் அல்லது திருடப்படலாம். அது உங்கள் மொபைலோடு முடிந்துவிடாது. அந்த மொபைலில் இருக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்களும் திருடியவர்களின் கைகளுக்கு சென்று, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்படியான நெருக்கடி சமயங்களில் மொபைலை கண்டுபிடிப்பதற்கு முன் திருடியவர்கள் ஏதும் செய்யாமல் இருக்க ஐஎம்இஐ எண் மூலம் இருக்கும் ஒரு வழியை பயன்படுத்தலாம் . அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
IMEI எண் மூலம் பிளாக் செய்யுங்கள்
ஒவ்வொரு ஃபோனும் சர்வதேச மொபைல் கருவி அடையாள எண் (IMEI) எனப்படும் 15 இலக்க தனிப்பட்ட எண்ணுடன் வருகிறது. இந்த தனிப்பட்ட எண் ஒவ்வொரு மொபைல் சாதனத்திற்கும் அடையாளச் சான்றிதழாகும், அதை மாற்ற முடியாது. உங்கள் தொலைபேசியின் பெட்டியில் அல்லது அமைப்புகள் பிரிவில் நீங்கள் எப்போதும் IMEI-ஐச் சரிபார்க்கலாம். உங்கள் மொபைலைக் கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்த முடியும் என்பதால், அதை எழுதி பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். இந்த 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைலை எப்படிக் கண்காணிக்கலாம் மற்றும் தடுக்கலாம் என்பது இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ஜன்தன் கணக்கு வைத்திருப்பவருக்கு முக்கிய செய்தி, உடனே இ படியுங்க
* உங்கள் கணினியில் CEIR இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். தற்போது, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே இந்த அரசு சேவை வழங்கப்படுகிறது.
* மொபைல் சாதனத்தின் பிராண்ட், மாடல், கடைசி இடம், விலைப்பட்டியலைப் பதிவேற்றுதல் போன்ற தேவையான அனைத்து தொலைந்த மொபைல் சாதன விவரங்களையும் நிரப்பவும்
* மாற்று மொபைல் எண்ணை நிரப்பி, Get OTP பட்டனை கிளிக் செய்யவும்.
* தொலைந்து போன ஃபோன் இருப்பிடக் கோரிக்கையை நிறைவுசெய்ய, நீங்கள் பெற்ற OTPயை உள்ளிட்டு சமர்ப்பி பட்டனை கிளிக் செய்யவும்.
* பின்னர், நீங்கள் ஒரு கோரிக்கை ஐடி எண்ணைப் பெறுவீர்கள். இந்த எண்ணைக் கொண்டு திருடப்பட்ட மொபைல் கிடைத்தவுடன் லாக்கை அன்லாக் செய்ய உதவும்.
மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் செய்தவுடன், ஃபோன் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, நெட்வொர்க் ஆபரேட்டருக்குத் தெரிவிக்கப்படும். மேலும், அந்த குறிப்பிட்ட IMEI எண்ணை முடக்குமாறு உங்கள் ஆபரேட்டரிடம் கேட்கலாம். CEIR இணையதளத்தைப் பயன்படுத்தி, உங்கள் தொலைந்த போனின் நிலையையும்பட்டியலில் சேர்க்கும்படி கேட்கப்படும். கூடுதலாக, தொலைந்த தொலைபேசியில் சிம் கா, காவல்துறை அதை எப்படி விசாரிக்கிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம். மேலும், உங்கள் ஃபோன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, IMEI எண்ணை அன்பிளாக் செய்யலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பம்பர் உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ