ஜியோவின் அசத்தல் பிளான் – ஆண்டுக்கு ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் போதும்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரீச்சார்ஜ் செய்யும் புதிய பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோவின் அசத்தல் அம்சங்களை தெரிந்து கொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:30 AM IST
  • ஜியோவின் அசத்தல் ஒரு வருட பிளான்
  • 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
  • வொர்க் பிரம் ஹோம் வாடிக்கையாளர்களுக்காக
ஜியோவின் அசத்தல் பிளான் – ஆண்டுக்கு ஒருமுறை ரீச்சார்ஜ் செய்தால் போதும் title=

சில ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் நம்பர் ஒன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த சாதனைக்கு காரணம் ஜியோவின் மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களே. ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் உங்களுக்கு குறைந்த விலையில் அதிக வேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோ புதிய திட்டம்

சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவை இரண்டும் ஒரு வருடம் செல்லுபடியாகும் டேட்டா திட்டங்கள். இந்த திட்டங்களை ஜியோ டெலிகாம் நிறுவனம் 'வொர்க் ஃப்ரம் ஹோம் டேட்டா பேக்குகள்' என்ற பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள திட்டங்களில் சில மாறுதல்களுடன் இந்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

மேலும் படிக்க | ஐபிஎல் இலவசமாக பார்க்க ஜியோவின் எந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யலாம்?

ஜியோவின் ரூ.2,878 திட்டம்

முதலாவதாக, ஹோம் டேட்டா திட்டத்தின் விலை ரூ.2,878. இந்த திட்டம், உங்களுக்கு ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இந்த திட்டத்தில் உங்களுக்கு மொத்தம் 730 ஜிபி இணையம் வழங்கப்படும். டேட்டா முடிவடைந்துவிட்டால் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். இது டேட்டா திட்டம் என்பதால், அழைப்பு, SMS அல்லது OTT நன்மைகள் கிடையாது.

ஜியோவின் மற்றொரு திட்டம்

ஜியோ சமீபத்தில் அறிமுகப்படுத்திய மற்றொரு திட்டமும் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் செல்லுபடியாகும். இதில், உங்களுக்கு தினசரி 2.5 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது, அதன் பிறகு இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவின் படி, இந்த திட்டத்தில் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.2,878 திட்டத்தைப் போலவே, இதில் டேட்டாவைத் தவிர வேறு எந்த நன்மைகளும் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் விலை ரூ.2,998.

மேலும் படிக்க | ஜியோ மாஸ் திட்டங்கள்! ரூ.300-க்கு கீழ் இவ்வளவு திட்டங்கள்

ஜியோவின் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' பிரிவில் மேலும் மூன்று திட்டங்கள் உள்ளன. இதன் விலை ரூ.181, ரூ.241 மற்றும் 301 ரூபாய் திட்டங்களாகும். அனைத்து திட்டங்களும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன. ரூ.181 திட்டத்தில், 30ஜிபி டேட்டாவும், ரூ.241 திட்டத்தில் 40ஜிபி டேட்டாவும், ரூ.301 திட்டத்தில் 50 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News