ஜியோ ஏர் ஃபைபர் vs ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம்... வயர்லெஸ் இண்டர்நெட் சேவையில் எது பெஸ்ட்!

ஜியோ ஏர் ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் இரண்டும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகள். இதில், பிளக் அண்ட் ப்ளே சாதனங்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2023, 06:15 PM IST
  • கிராமப்புறங்களுக்கு மிகவும் பயனுள்ள வயலெஸ் இண்டர்நெட்.
  • 30 MBPS மற்றும் 100 MBPS இணைய வேகத் திட்டங்கள்.
  • ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜியோ ஏர் ஃபைபர் vs ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம்...  வயர்லெஸ் இண்டர்நெட் சேவையில் எது பெஸ்ட்! title=

Jio Air Fiber vs Airtel Xstream AirFiber : ரிலையன்ஸ் ஜியோ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஜியோ ஏர் ஃபைபரை (Jio Air Fiber) அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் புனே ஆகிய 8 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ ஏர் ஃபைபர் என்பது ஒரு 'ஒருங்கிணைந்த எண்ட்-டு-எண்ட் தீர்வு'. இதன் கீழ், வாடிக்கையாளர் அதிவேக பிராட்பேண்ட், ஸ்மார்ட் ஹோம் சேவை மற்றும் வீட்டு பொழுதுபோக்கு வசதிகளைப் பெறுகிறார்.

வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகள்

சந்தையில் ஏற்கனவே இருக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபருடன் (Airtel Xstream AirFiber) ஜியோ ஏர் ஃபைபர் போட்டியிடுகிறது. ஜியோ ஏர் ஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் இரண்டும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகள். இதில், பிளக் அண்ட் ப்ளே சாதனங்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களுக்கு மிகவும் பயனுள்ள வயலெஸ் இண்டர்நெட்

ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இது கிராமப்புறங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தின் கீழ், பயனர்களுக்கு இணையத்திற்கான பாரம்பரிய ரவுட்டர்கள் மற்றும் ஃபைபர் கேபிள்கள் தேவையில்லை. இதில் செட்டாப் பாக்ஸ் இன்றி இன்டர்நெட்டை அனுபவிக்க முடியும்.

எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவை

ஜியோ ஏர் ஃபைபர் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் புனே ஆகிய 8 நகரங்களில் தொடங்கப்பட்ட நிலையில், எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் சேவை தற்போது டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜியோ தற்போது ஏர் ஃபைபர் மற்றும் ஏர் ஃபைபர் மேக்ஸ் ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | JioFiber Plan: ரூ.500க்கும் குறைவான விலையில் அன்லிமிடெட் இணைய சேவை!

30 MBPS மற்றும் 100 MBPS இணைய வேகத் திட்டங்கள்

ஏர் ஃபைபர் திட்டத்தில், பயனர்கள் இரண்டு வகையான இணைய வேகத் திட்டங்களைப் பெறுகின்றனர். இது 30 MBPS மற்றும் 100 MBPS இணைய வேகத் திட்டங்களைக் கொண்டுள்ளது. 30 எம்பிபிஎஸ் வேகத்திற்கு ரூ.599 கட்டணம். அதேசமயம் நிறுவலின் போது சேவைக் கட்டணம் ரூ. 1,000. ஆனால் நிறுவனம் வருடாந்திர திட்டங்களில் இலவச நிறுவலை வழங்குகிறது. 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் கூடிய திட்டம் ரூ.899 மற்றும் ரூ.1199க்கு கிடைக்கிறது. இதில், வாடிக்கையாளர் 550க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள், 14 பொழுதுபோக்கு பயன்பாடுகள், Amazon, Netflix, Jio Cinema போன்ற பிரீமியம் செயலிகளைப் பெறுகிறார்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber)

இதனுடன், AirFiber Max திட்டத்தில் 300 MBPS, 500 MBPS மற்றும் 1000 MBPS வேகம் கிடைக்கிறது. நிறுவனம் அதன் விலைகளை ரூ.1,499, ரூ.2,499 மற்றும் ரூ.3,999 என நிர்ணயித்துள்ளது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ஒரே ஒரு வகை அதிவேக திட்டத்தை மட்டுமே வழங்குகிறது. இதில் 100 எம்பிபிஎஸ் வேகம் ரூ.799க்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர்  சாதனங்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் மற்றும் 64 சாதனங்கள் வரை ஒரே நேரத்தில் இணைக்க முடியும்.

மேலும் படிக்க |Cyber Alert: பாகிஸ்தானின் சைபர் கிரைம் யுத்தம்! இந்த 3 செயலிகளை பயன்படுத்த வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News