ரோபோவுக்கும் வியர்க்கும்: ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளின் சாதனை

மனிதனைப் போன்றே வியர்க்கும் ரோபோக்களை ஜப்பான் தயாரிக்கும். இது மிகவும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2022, 08:17 AM IST
  • வியர்க்கும் ரோபோ கண்டுபிடிப்பு
  • சேதமடைந்தால் தோல் தானாகவே உருவாகும்
  • மனிதர்களாகவே மாறும் ரோபோக்கள்
ரோபோவுக்கும் வியர்க்கும்: ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளின் சாதனை title=

தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனைப் போன்றே ரோபோக்கள் உருவாக்கபப்ட்டன. ஆனால், இந்த இயந்திர மனிதர்கள், செயற்கையானவை என்பதால், அவற்றுக்கு மனிதனின் உடலில் ஏற்படுவதுபோன்ற இயற்கை மாற்றங்களும், காலநிலை மாற்ற எதிரொலிப்பு நிகழ்வுகளும் நடைபெறாது.

தற்போது, ரோபோக்கள் தொடர்பாக மேற்கொண்டுள்ள மேம்பாடுகள், அவற்றை மனிதனைப் போன்றே மாற்றுகின்றன,

விரலை வளைக்கும் போது, ​​மனிதரைப் போன்றே ரோபோ விரலில் இயற்கையாகத் தோற்றமளிக்கும் சுருக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காயமடையும் போது, ​​கொலாஜன் பேண்டேஜ் உதவியுடன் மனிதர்களைப் போல் சுயமாக குணமடையும் நுட்பமும் வந்துவிட்டது. 

ஆனால் இதற்கு சருமத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ரோபோக்களின் சருமம் சாதாரண மனிதத் தோல் போல் உணர்கிறது, ஆனால் அது பலவீனமாக உள்ளது.

எதிர்காலத்தில், தோல் மற்றும் ஒத்த அசைவுகளைக் கொண்ட ரோபோக்கள் உலககில் வரலாம். வியர்வை தோன்றும் ரோபோ விரலை ஏற்கனவே ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதால், ரோபோவின் சேதமடைந்த சருமம் மனிதர்களைப் போலவே தானாகவே சரியாகலாம்.

மேலும் படிக்க | Student Robot: 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ!

மனிதனைப் போன்ற ரோபோக்கள் என்ற லட்சியத்தை நோக்கிய முயற்சியின் முக்கியமானதாக இது இருக்கும். விரல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள முடிந்ததாக கூறும் விஞ்ஞானிகளின் குறிப்பு, உயிரோட்டமான உடற்கூறியல் கொண்ட இந்த ஈர்க்கக்கூடிய தொழில்நுட்ப சாதனை ஆகும்.

உயிருள்ள சதைக்கும் இயந்திரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இந்த தொழில்நுட்ப அறிவு குறைக்கலாம்.

இந்த ஆய்வு ‘மேட்டர்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. "தோல் திசு, ரோபோவின் மேற்பரப்புடன் எவ்வளவு நன்றாக ஒத்துப்போகிறது என்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. இது, உயிருள்ள தோலால் மூடப்பட்ட ரோபோக்களை உருவாக்குவதற்கான முதல் படியாகும்” என்று டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விஞ்ஞானி ஷோஜி டேகுச்சி கூறினார்.

"ரோபோட்களுக்கு உயிரினங்களின் தோற்றத்தையும் தொடுதலையும் வழங்குவதற்கான இறுதி தீர்வு உயிருள்ள தோல் என்று நினைக்கிறேன், ஏனெனில் இது விலங்குகளின் உடல்களை மறைக்கும் அதே பொருள். இத்தகைய முன்னேற்றங்கள் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே ஒரு புதிய உறவை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தன" என்று டேகுச்சி கூறினார்.

மேலும் படிக்க | ஆஹா இனி வேல மிச்சம், சப்பாத்தி சுடும் ரோபோ; வைரலாகும் வீடியோ

ரோபோ விரலை முதலில் குழு சிலிண்டரில் ஊறவைத்தது. கொலாஜன் மற்றும் மனித தோல் ஃபைப்ரோபிளாஸ்ட்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட கரைசலில் கொள்கலன் நிரப்பப்பட்டது. இவை இரண்டு முக்கிய கூறுகளும் தோலின் இணைப்பு திசுக்களை உருவாக்குகின்றன. 

மனித எபிடெர்மல் கெரடினோசைட்டுகள் எனப்படும் உயிரணுக்களின் அடுத்த அடுக்கு அதனுடன் ஒட்டிக்கொள்வதை உறுதி செய்வதற்காக விரலின் மேற்பரப்பு இந்தப் பொருளுடன் பூசப்பட்டது.

வளைக்கும் போது, ​​இயற்கையான தோற்றமுடைய சுருக்கங்கள் விரலில் உருவாகின்றன. காயமடையும் போது, ​​கொலாஜன் பேண்டேஜ் உதவியுடன் தோல் மனிதர்களைப் போல் சுயமாக குணமடையலாம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது சாதாரண தோல் போல் உணர்கிறது.

“ரோபோவின் விரல் மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது. இதனால் உண்மையான விரலை அசைக்கும்போது ஏற்படும் சப்தத்தைக் கேட்பது சுவாரஸ்யமாக இருக்கிறது” என்று டேகுச்சி கூறினார்.

மேலும் படிக்க | Elon Musk Vs Twitter: டிவிட்டர் Poison pill உத்தியை கடைபிடிப்பது ஏன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News