இனி உணவு ஆர்டர் செய்தாலும் தள்ளுபடி... இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் - முழு விவரம்

வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரியில் பல சலுகைகளை வழங்கும் ஸ்விக்கியின் சந்தாவை வழங்குகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2024, 04:44 PM IST
  • Swiggy One சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இதன் விலை ரூ.2,500 ஆகும்.
  • இது தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது.
இனி உணவு ஆர்டர் செய்தாலும் தள்ளுபடி... இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் - முழு விவரம் title=

Vodafone Idea Recharge Plans: தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi) அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச Swiggy One சந்தாவை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கு இந்த உறுப்பினர் சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இலவச Swiggy One சந்தாவைப் பெறுவார்கள். 

Swiggy One என்றால் என்றால்?

Swiggy One என்பது ஒரு வாடிக்கையாளர் சேவையாகும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு Swiggy மூலம் உணவை ஆர்டர் செய்வதில் தள்ளுபடிகள் மற்றும் பிற நன்மைகளை கிடைக்கும். 501 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட Vi Max எனப்படும் போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பயன்படுத்தினால், இப்போது Swiggy One இலவச மெம்பர்ஷிப்பைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தாவுக்கு, பொதுவாக 2 ஆயிரம் ரூபாய் 500 செலுத்த வேண்டும். ஆனால் Vi Max திட்டத்தில் நீங்கள் அதை இலவசமாகப் பெறுவீர்கள்.

வோடபோன் ஐடியாவின்  இந்த இலவச சலுகை, நிறுவனத்தின் 'Choice' முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சியின் கீழ், வோடபோன் ஐடியா பயனர்கள் பொழுதுபோக்கு, உணவு, பயணம் மற்றும் மொபைல் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் தங்களுக்குப் பிடித்த அம்சங்களைத் தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க | கெத்தாக இரண்டு சிஎன்ஜி மாடல்களை களமிறக்கும் டாடா..! சிறப்பம்சங்கள் இதோ

எந்தெந்த திட்டங்களில் இது கிடைக்கும்?

இப்போது வோடபோன் ஐடியா அதன் Vi Max என்ற தனிப்பட்ட மற்றும் குடும்ப போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு 2500 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 'Swiggy One Membership'சந்தாவை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது. Vi Max போஸ்ட்பெய்ட் பயனர்கள் ரூ. 501, ரூ. 701, REDX திட்டம் ரூ. 1101 மற்றும் Vi Max குடும்பத் திட்டம் ரூ.1001 மற்றும் ரூ.1151 திட்டங்களில் Swiggy One உறுப்பினர்களைப் பெறலாம். குறிப்பாக, Swiggy One பல பலன்கில் ஒன்றாகும்.

வேறு பலன்கள்?

Vi Max போஸ்ட்பெய்டின் தனிநபர் மற்றும் குடும்பத் திட்டங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு விருப்பமான பலன்களைத் தேர்வுசெய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த நன்மைகள் பல வகைகளில் உள்ளன. அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், சன்நெக்ஸ்ட் ஆகிய ஓடிடிகளின் சந்தா கிடைக்கும். 

மேலும் பயணம் செய்பவர்களுக்கு, Easemytrip மூலம் மலிவான விமானங்களை பதிவு செய்யும் பலனும் இதில் கிடைக்கும். நார்டன் 360 மொபைல் பாதுகாப்புடன் உங்கள் மொபைலைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். மேலும், EazyDiner மற்றும் இப்போது Swiggy One Membership மூலம் உணவுகளில் தள்ளுபடியைப் பெறலாம். 

மேலும் படிக்க | ஏர்டெல் டிஜிட்டல் விருந்து..! இந்த 2 பிளானில் நெட்ஃபிளிக்ஸ் ஹாட்ஸ்டார் இலவசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News