சூரியன், சந்திரன், வீனஸ், உள்ளிட்ட ஏழு கிரகங்கள் தொடர்பான ஆய்வு நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்காக யுவிகா 2019 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இந்த திட்டத்தின் மூலம், ஒரு மாநிலத்திற்கு 3 பேர் வீதம், 108 மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு வார காலம் பயிற்சி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான இஸ்ரோவின் விண்வெளித்திட்டங்களை விளக்கிய சிவன், சூரியனின் வெளிப்பரப்பை ஆராய ஆதித்யா என்ற திட்டத்தை 2021ம் ஆண்டு செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார். அத்துடன் நிலவை ஆய்வு செய்யும் மங்கள்யான் 2 திட்டம் 2022ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும் 2023ம் ஆண்டு வீனஸ் கிரகத்திற்கு ராக்கெட் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.