iPhone ஆர்வலர்களுக்கு Bad News: எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது ஆப்பிள் நிறுவனம்

ஐபோன் SE இந்த போன் வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் பிரபலமான போனாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 12:25 PM IST
  • ஐபோன் SE போன் வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் பிரபலமான போனாக உள்ளது.
  • iPhone SE 3-யின் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு முதல், iPhone SE 3 2022 இல் வெளியிடப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன.
iPhone ஆர்வலர்களுக்கு Bad News: எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியது ஆப்பிள் நிறுவனம் title=

ஆப்பிள் நிறுவனம் விலையுயர்ந்த போன்களை உற்பத்தி செய்து விற்பதற்கு பெயர் பெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கென்று உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில், ஆப்பிள் (Apple) ஐபோன் 13 (iPhone 13) தொடரை அறிமுகப்படுத்தியது. அதன் விலை மிக அதிகமாகும். அதாவது சாமானியர்களுக்கு எட்டாத தூரத்தில் இதன் விலை உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஒரு மலிவான தொலைபேசியையும் கொண்டுள்ளது. இது ஐபோன் SE ஆகும். இந்த போன் வாடிக்கையாளர்கள் இடையே மிகவும் பிரபலமான போனாக உள்ளது.

இந்த போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் வெற்றி பெற்றதையடுத்து, ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3 ) அறிமுகம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. iPhone SE 3-யின் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இதிலிருந்து அறிய முடிகின்றது. இதற்கு பதிலாக அடுத்த ஆண்டு  iPhone SE Plus என்ற பெயரில் ஒரு புதிய போன் அறிமுகம் செய்யப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

iPhone SE Plus அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்

ஐபோன் SE தொடர் (iPhone SE Plus) 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொடரின் தொலைபேசி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை. இப்போது தொடரின் அடுத்த போன் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ALSO READ: iPhone SE 3 அறிமுகம் எப்போது? என்னென்ன அம்சங்கள் இருக்கும் 

Ross Young (@DSCRoss) படி, ஐபோன் SE தொடர் பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்பிள் 2022 இல் iPhone SE Plus ஐ அறிமுகப்படுத்தும். இந்த ஃபோனில் iPhone SE 2020 போன்ற 4.7 இன்ச் எல்சிடி டிஸ்பிளே இருக்கும். இது கிட்டத்தட்ட, iPhone 8-ல் உள்ளது போன்ற ஒரே மாதிரியான டிஸ்ப்ளே ஆகும். இந்த போனில் 5ஜி வசதியும் இருக்கும்.

iPhone SE 3 2024-க்குள் அறிமுகம் செய்யப்படும்

5.7 முதல் 6.1 இன்ச் வரை எல்சிடி இருக்கக்கூடிய iPhone SE 3 2024 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு முதல், iPhone SE 3 2022 இல் வெளியிடப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆப்பிள் ஏன் திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தது என்பது தெரியவில்லை. இது மலிவான விலையில் புதிய ஐபோனை (iPhone) வாங்க ஆவலாக இருந்த ஐபோன் ஆர்வலர்களுக்கு இடையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த தகவலை கசியவிட்ட ஆதாரத்தின் இது வரையிலான டிராக் ரெகார்ட் நேர்த்தியாக உள்ளது. iPhone SE 3-ல் எல்சிடி பேனல் இருக்கும் என்றும் முன்பு செய்தி வந்தது. எனினும், இந்த தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: iPhone 12 இல் மிகப்பெரிய தள்ளுபடி, குறைந்த விலையில் வாங்கலாம் 

ALSO READ: நம்ப முடியாத விலையில் iPhone 12: Flipkart அதிரடி பண்டிகை கால சலுகை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News