இனி இது போன்ற சலுகை கிடைக்காது! 21 ஆயிரத்துக்கு ஐபோன் 13 விற்பனை

ஐபோன் 13 வாங்கும் கனவு விலை அதிகம் என்பதால் வாங்க முடியமால் இருந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சிறந்த சலுகை வந்துள்ளது. 21 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இந்த போன் கிடைக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2023, 09:14 PM IST
  • ஐபோன் மொபைலுக்கு மிகப்பெரிய ஆஃபர்
  • இதுவரை இல்லாதளவுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை
  • 21 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம்
இனி இது போன்ற சலுகை கிடைக்காது!  21 ஆயிரத்துக்கு ஐபோன் 13 விற்பனை title=

iPhone 13 மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் போன்களில் ஒன்றாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மொபைலாக இருந்தாலும் இன்னும் பிரபலமாக உள்ளது. இன்னும் பலர் இந்த போனை வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் விலை அதிகம் என்பதால் வாங்க முடியவில்லை. அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சிறந்த சலுகை வந்துள்ளது. 21 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இந்த போன் கிடைக்கும். எப்படி என்று பார்க்கலாம்?\

மேலும் படிக்க | வெறும் 1000 ரூபாய்க்குள்... அசத்தலான தரமான Wireless Earphones இதோ!

Apple iPhone 13 சலுகை

Apple iPhone 13 128GB மாறுபாட்டின் விலை ரூ.69,900. ஆனால் Flipkart இல் ரூ.60,999க்கு கிடைக்கிறது. போனுக்கு 12 ஆயிரம் ரூபாய் முழுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு தொலைபேசியில் பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகள் உள்ளன, இதன் காரணமாக தொலைபேசியின் விலை கணிசமாகக் குறையும்.

ஆப்பிள் ஐபோன் 13 வங்கி சலுகைகள்

ஐபோன் 13 ஐ வாங்க HDFC கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு இதன் விலை ரூ.58,999 ஆக இருக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.

Apple iPhone 13 Exchange ஆஃபர்

ஐபோன் 13ல் 38 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். ஆனால் உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருக்கும் போது மற்றும் மாடல் சமீபத்தியதாக இருந்தால் மட்டுமே முழுமையான ஆஃபர் கிடைக்கும். ஒருவேளை உங்களுக்கு முழு ஆஃபர் கிடைக்கும்பட்சத்தில் போனின் விலை ரூ.20,999 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | தற்போது ரூ.500 செலவில் உங்கள் வீட்டில் பிராட்பேண்ட் சேவைகளை பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News