மிக குறைந்த விலையில் iPhone 12, iPhone 12 Mini வாங்க அரிய வாய்ப்பு

iPhone 12 mini Discount: நீங்கள் ஐபோனை மலிவாக வாங்க விரும்ப்பப்பட்டால், பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் சிறந்த சலுகையை பயன்படுத்தி வாங்கலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2022, 09:31 AM IST
  • ஐபோன் 12 இல் தள்ளுபடியைப் பெறுங்கள்
  • ஐபோன் 12 மினியிலும் சலுகை உள்ளது
  • எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது
மிக குறைந்த விலையில் iPhone 12, iPhone 12 Mini வாங்க அரிய வாய்ப்பு title=

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் பலவித ஆஃபர்கள் உள்ளன. குறிப்பாக ஐபோனில் சிறந்த சலுகைகள் இதில் வழங்கப்படுகிறது, இதைப் பயன்படுத்தி நீங்கள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியை மிகவும் மலிவு விலையில் வாங்கலாம்.

இருப்பினும், இதில் வழங்கப்படும் டிஸ்கவுண்டானது ஸ்டோரேஜ் மற்றும் வண்ண வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். மேலும் இ-காமர்ஸ் தளங்களில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த பிளாட்ஃபார்மில் இருந்து நீங்கள் ஐபோனை எவ்வளவு கம்மி விலையில் வாங்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | Flipkart Sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி

அமேசானில் சிறந்த சலுகைகள் கிடைக்கும்
ஐபோன் 12 இன் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.11,910 என்கிற தள்ளுபடியில் வாங்கலாம். இருப்பினும் இதன் ஒரிஜினல் விலை ரூ.65,900 ஆகும். இந்தச் சலுகையானது கருப்பு நிற போனில் தரப்படுகிறது. மறுபுறம், அமேசானில் நீலம் மற்றும் வெள்ளை வண்ணம் கொண்ட போன் வகைகளுக்கு ரூ.11 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் சிவப்பு வண்ண வகைக்கு ரூ.9,910 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதேபோல், ஊதா மற்றும் பச்சை வண்ண வகைகளின் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் ரூ.8,910 தள்ளுபடி உள்ளது. மறுபுறம், அமேசானில் 128 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.11 ஆயிரம் தள்ளுபடியில் வாங்கலாம். இதன் ஒரிஜினல் விலையானது ரூ.70,900 ஆகும். அதேபோல் ஐபோன் 12 இன் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ.26,901 தள்ளுபடி உள்ளது. இந்த தள்ளுபடி போனின் ஒரிஜினல் விலை ரூ.94,900 ஆகும்.

இது தவிர, அமேசானில் ரூ.11,650 எக்ஸ்சேஞ்ச் சலுகையும், பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டில் ரூ.2000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

பிளிப்கார்ட்டில் என்னென்ன சலுகைகள் உள்ளன
மறுபுறம், பிளிப்கார்ட் பற்றி பேசுகையில், ஐபோன் 12 இன் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் ரூ.10,910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி போனின் ஒரிஜினல் விலை ரூ.64,900 ஆகும். அதே நேரத்தில், அதன் 128 ஜிபி ஸ்டோரேஜில் ரூ.9,910 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

அதேபோல் ஐபோன் 12 மினியின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் மீது ரூ.9,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் எவ்வித தள்ளுபடுஇயும் வழங்கப்படவில்லை, அதே சமயம் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ.9,901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தத் சீரிஸ் இல் ரூ.12,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் ரூ.3250 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News